பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vasoxine

1142

veiled appearance


ஒருவரில், விந்தணுக்குழலின் வெட்டப்பட்ட பகுதிகளை மறு இணைப்பு செய்தல்

vasoxine : வாசூக்கின் : உணர்விழப்பின்போது இரத்த அழுத்தத்தை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படும் மெத்தோக்சாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vATs (Video-Assisted Thorascic Surgery) : 9 ஒளிப் பேழை வழி இதய அறுவை.

vection : ஏந்திச் செல்லல் : தொற்றுள்ள ஒருவரிடமிருந்து உடல்நலமுள்ள ஒருவருக்கு நோயுண்டாக்கக் காரணமான ஒரு பொருளை ஏந்திச்செல்லல்.

vector : நோய்க்கடத்தி; நோய் பரப்பி : தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம்.

vectorcardiogram : இதயவிசையளவு : இதயமின் ஆற்றல் வரைவின் மூலம் உண்டாகும் வரைவுப் பதிவுபடும்.

vectorcardiograph : இதயவிசையளவு : இதயமின் வரைவுக்குப் பயன்படும் கருவி.

vectorcardiography : இதய விசையளவு வரைவு : வளைவுகளால் அறியப்படும் இதய மின் ஆற்றலின் திசையையும் அளவையும் கண்டறியும்முறை.

vegetable cell : காய்கனியணு : சிறுநீரக அணுப்புற்றில் காணப்படும் பெரிய உயிரணு, அதில் அணுக் கணியம் கூழ்மம் தெளிவான, கொழுவிய, கிளைக்கோஜன் பொதிந்து கூர்வளை ஒரங்கள், சிறுநிறமிகை உயிரணு உள்ளன. அவை கட்டுகளாக வரிசையமைந்துள்ளன.

vegetations : மிகைத்தசை வளர்ச்சி; வளரிகள் : உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி.

vegetative : தனிவாழ்வுக்குரிய; வளர்நிலை : பாலினம் சாராத பெருக்கமுடைய.

vegetative nervous system : தன்னியக்க நரம்பு மண்டலம் : சுரப்பிகள் சுரத்தல், நெஞ்சுப்பை அடித்தல் போன்ற எண்ணாது செய்யும் செயல்களைத் தானாகச்செயற்படுத்தும் வகையில் கட்டுப்படுத்துகிற நரம்பு மண்டலம்.

vehicle : ஊடகம் (ஊடுபொருள்) : மருந்தைக் கலக்கிக் கொடுப் பதற்கான ஒரு செயலற்ற பொருள். எ-டு: கலவை மருந்துகளில் நீர்.

veiled appearance : திரையுரு : நீள எலும்புகளின் தண்டு மற்