பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

veiled cell

1143

venepuncture


றும் புறணிக்கு இணையான நீள் புள்ளியுருக்கள் எக்ஸ் கதிர் படத்தில் தெரியும் என்பாகு தசையழற்சி.

veiled cell : திரையணு : உள்வரு நிண நாளங்களில் ஒரப்புழை யிலுள்ள, ஒர் உயிர்க்கரு விழுங்கணுத் தொகுதியின் உயிரணுவைக் காட்டும் ஒரு விளைவியம் (எதிர்புரதம்).

veins : சிரைகள் : உடலிலிருந்து அல்லது நுரையீரல்களிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய். ஆனால், கல்லீரல் சிரையான குடலிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தைச் சிரைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, சீரணிக்கப்பட்ட பொருட்களை நுரையீரலுக்குக்கொண்டு செல்கிறது. நுரையீரல் சிரையானது நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச்செல்கிறது.

velactin : வெலாக்டின் : பாலின்றிக் கொடுக்கப்படும் சீருணவு களுக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் பொருளின் வணிகப் பெயர்.

velamen (velamentum) : மூளை சூழ் தாள்சவ்வு.

velar : பின் அண்ணம் : அண்ணத்தின் பின்புறப் பகுதி.

velocardiofacial syndrome : திரைமுக இதயநோயியம் : அகன்ற நாசி, கண்களுக்கிடையில் அதிக இடைவெளி, பிள வண்ணம், மனவளர்ச்சிக் குறை, ஃபேலோ நாற்குறை நோயியம் போன்ற இதயக்கோளாறு, வலப்பக்க பெருந்தமனிவளைவு, கீழறையிடைச் சுவர்த்துளை, ஆகியவை கொண்ட ஆதிக்கப் பண்புடை நுண்நீக்க உருவக் உடற்குறை.

velius : நுண்மயிர் : பூமயிர் உதிர்ந்த பிற்கு, பூப்படையுமுன் நுண் உடல் மயிர் தோன்றுவது.

velosef : வெலோசெஃப் : சிறு நீர்க் கோளாறுகளுக்குப் பயன் படுத்தப்படும் செஃப்ராடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vena cava : பெருஞ்சிரை : உடல் முழுவதிலுமிருந்து ஆக்ஸிஜன் நீக்கப்பட்ட இழந்த இரத்தத்தை இதய வலது மேலறைக்கு கொண்டு சென்று வடிக்கும் இருபெரும் சிரைகள் இரண்டில் ஏதோ ஒன்று.

venacavography : பெருஞ்சிரை வரைவு : பெருஞ்சிரையின் ஊடுகதிர்ப்பட வரைவு.

venepuncture : சிரையூசி; சிரைதுளைப்பு : ஒரு சிரையினுள் ஒர் ஊசியைச் செருகுதல்.