பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

venereal1144

venom


venereal : பாலுறவு சார்ந்த; கலவி மேக : பாலுறவு தொடர்பான அல்லது பாலுறவினால் உண்டான.

venereal disease : பாலுறவு நோய் (மேகநோய்); கலவி மேக நோய் : பாலுறவு மூலம் உண்டாகும் மேக நோய்.

venereal remedies : பாலுறவு நோய் மருத்துவம்; கலவி மேக நோய் மருத்துவம் : பாலுறவினால் ஏற்படும் மேக நோயைக் குணப்படுத் துவதற்கான மருத்துவ முறைகள்.

venereologist : பால்வினை மருத்துவர் : பால்வினை நோய்கள் சிறப்பு மருத்துவ வல்லுநர்.

venereal : பால்வினைநோய் : ஒழுக்கக்கேடான முறையில் ஈடுபடும் சிற்றின்பக் கலவி.

venereal diseases : மேகநோயால் ஏற்படும் நோய்.

venereal : பால்வினை நோய் : ஒழுக்கக்கேடான முறையில் ஈடுபடும் சிற்றின்பக் கலவியால் ஏற்படும் பால்வினை நோய்.

venereal diseases : மேக நோய்.

venereology : பாலுறவு நோயியல்; பால்வினை நோயியல்; கலவி மேகவியல் : பாலுறவி னால் உண்டாகும் நோயினை ஆராய்ந்து, குணப்படுத்துவற் கான அறிவியல்.

venesection : குருதி வடிப்பு; சிரைக் குறுக்குத் திறப்பு; சிரை வெட்டு : முற்கால மருத்துவத்தில் இரத்தவடிப்பு முறை.

venin : வெனின் : பாம்பு விஷத்தில் காணப்படும் பல்வேறு நச்சுப் பொருள்களில் ஒன்று.

venipuncture : சிரைத்துளைப்பு : இரத்தம் நீர்மருந்து அல்லது மருந்துகளை ஊசிவழிசெலுத்த ஒரு ஊசிகொண்டு சிரையைத் துளைத்தல்.

venodilator : சிரைவிரிப்பான் : சிரைகளை விரிவடையச்செய்து கரியநைட்ரேட் போன்ற முன் சுமையைக் குறைக்கும் பொருள்.

venography : உள்நாளச் சோதனை; சிரை ஊடுகதிர்ச் சோதனை : உள்நாள மண்டலத்தை ஒர் ஊடகத்தின் துணையுடன் ஊடுகதிர் மூலம் பரிசோதித்தல்.

venoclysis : சிரை ஊட்டம்; சிரைவழி மருந்தேற்றல்; சிரைவழி ஊட்டமேற்றல் : ஒரு சிரையினுள் ஊட்டச்சத்தினை அல்லது மருந்துத் திரவத்தைச் செலுத்துதல்.

venom : நஞ்சு : தேள், பாம்பு, சிலந்தி போன்றவை உற்பத்தி செய்யும் நச்சுத் திரவம்.