பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

venomous

1145

ventouse extraction


venomous : நஞ்சமைந்த : நஞ்சை சுரக்கும் சுரப்பி அல்லது சுரப்பி களைக் கொண்ட.

veno-occlusive : சிரை அமைப்பு : சிரைகளின் அமைப்பு.

venoscan : சிரைப்படம் : டெக்னிஷியம் பொதிந்த ஃபைப்ரினோ ஜனை ஊசி மூலம் செலுத்தி ஆழ்சிரை குருதிக்கட்டி பற்றிய ஆய்வு.

venosity : நாளக்கோளாறு : குருதியின் மிகுபகுதி இரத்த நாளத்தில் இல்லாமல் சிரையில் தேங்குதல் அதனால் காற்றுாட்டம் குருதியில் குறைதல்.

venostasis : சிரைத்தேக்கம் : ஒரு பகுதியிலிருந்து சிரையிலிருந்து வெளிவருவது தடைபடுதல்.

venotomy : சிரை அறுவை : ஒரு சிரையை வெட்டியெடுத்தல், குருதி வடிப்பு.

venous : சிரை சார்ந்த; சிரையிய : உட்செல் குருதி நாளத்தில் அடங்கிய.

ventilation : மூச்சூட்டம் : நுரையீரல்களுக்கும் சுற்றுப்புறகாற் றுக்கும் இடையே நடைபெறும் வளிமாற்ற இயக்கம். மாசடைந்த காற்றை மாற்றி புதுவெளிப்புற காற்று வழங்கல். தொற்று ஆபத்திலிருந்து விடுபட்டு செளகரியமான சூழ்நிலையை உருவாக்க உள் வரும் காற்றின் அளவும் வெப்ப நிலையும் கட்டுப்படுத்தப்படல்.

ventilation-perfusion imaging : மூச்சூட்ட ஊடு பரவுபடப்பதிவு : நுரையீரலில் குருதிக்கட்டித் துகளடைப்பு காலியிடக் குறையாகத் தோன்றுவதை கண்டு பிடிக்கப் பயன்படுகிறது.

ventilation-perfusion ratio : மூச்சூட்டல்-ஊடுபரவல் விகிதம் : நுரையீரலில் வளிமாற்றத் திறனை அளப்பது. பரவல் 1-க்கும் அதிகமான விகிதத்தால் அறியப்படுகிறது. விகிதம் 1-க்கும் குறைவாயிருப்பது மூச்சூட்டக் குறையைக் காட்டுகிறது.

ventilator : காலதர் (பலகணி); காற்றூட்டம் : காற்றோட்டப் புழை, காற்றும், வெளிச்சமும் வருவதற்கான சாதனம்.

ventimask : காற்றூட்ட முகமுடி : ஆக்சிஜன் ஊட்டுவதற்கான ஒரு முகமூடி இது நுரையீரல்களுக்குச் சீரான அழுத்தத்தில் ஆக்சிஜன் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

ventouse extraction : கருவி மகப்பேறு; வெற்றிக் கோல் வெளியிழுப்பு : தாய்மை மருத்துவத்தில் வெற்றிட வெளியேற்றுக் கருவி மூலம் குழந்தையை வெளிக்கொணர்தல்.