பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vesicular

1150

vibriocardiogram


vesicular : கொப்புள : ஒரு கொப்புளம் சவ்வுப்பை அல்லது கொப்புளங்கள் தொடர்பான.

vesiculitis : விந்துப்பையழற்சி; சவ்வுப்பை அழற்சி : சவ்வுப் பையில் முக்கியமாக விந்துப் பையில் ஏற்படும் வீக்கம்.

vesiculography : விந்துப்பை வரைவு : விந்துப் பைகளின் கதிர்ப்படம்.

vessel : நாளம்; குழாய் : இரத்தம், நிணநீர் போன்றவற்றைக் கொண்டுள்ள அல்லது கொண்டு செல்லும் ஒரு குழாய்.

vestibular : ஊடு தாய்க்குழாய்; இடை கழி : மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்பு உடைய நடுக்குழாய்.

vestibular of the ear : காது மையப்புழை.

vestige : எச்ச உறுப்பு : முன்பு இருந்த பயனற்றுப்போன உறுப்பின் எச்சப்பகுதி.

V-genes : வி-மரபணுக்கள் : லேசான மற்றும் கனமான ஏமப்புரத (இம்யூனோகுளோபுலின்) மாறுதலுக்குட்பட்ட பகுதிகளுக்கான குறியம்.

V.squint : வி-மாறுகண் : ஒரப் பார்வை கீழே பார்க்கும் போது நெருக்கமாகவும் மேலே பார்க்கும்போது தூரமாக விலகி இருக்கும் கண்கள்.

veto cell : தடுப்பணு : தன்பெரு திசு ஒத்திசை விளைவிய தொகுதி செயல்படும் திறமை கொண்ட 'டீ' அணுக்களின் இயக்கத்தை தடுக்கும், ஏமவணு.

wiable : தனித்து வாழக்கூடிய; வாழவல்ல : தனித்து வாழும் திறனுடைய.

Vi-antigen : வி-விளைவியம் : சால்மொனெல்லா டைஃபையின் உறைவிளைவியம், குறிப்பாக அதன் நச்சுத்தன்மையோடு சேர்ந்தது.

vibramycin : விப்ராமைசின் : விரைவாக ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மெதுவாக வெளியேற்றப்படும் டோக்சிசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

vibration : அதிர்வு : வேகமான முன்பின் இயக்கம்.

vibrio : விப்ரியோ : குட்டையான, இயக்கத்துடிப்பு கொண்ட இராம் சாய மேற்கா விப்ரியோ இனத்தின் தண்டுகள் தீவிர இரைப்பைக் குடலழற்சியை உண்டாக்குகின்றன.

vibriocardiogram : விப்ரியோ இதய வரைபடம் : விப்ரியோ இதய வரைபதிவின், வரைபடப் பதிவு.