பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vitamin в1

1156

vitrectomy


வைட்டமின்-பி தொகுதி வேதியியல் முறையில் தொடர்புடையவை. பயோட்டின், சயானோ கோபாலமைன், ஃபோலிக் அமிலம், நிக்கோட்டினிக் அமிலம், பாந்தோத்தெனிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோஃபிளேவின், தையாமின் ஆகியவை இத்தொகுதியைச் சேர்ந்தவை.

vitamin B1 : உயிச்சத்து B1: தையமின்.

vitamin B6 : உயிச்சத்து B6 : பைரிடாக்சின்.

vitamin B2 : உயிச்சத்து B2 : ரிபோஃபிளேவின்.

vitamin B12: உயிர்ச்சத்து B12 : சயானோ கோபாலமின்.

vitamin C : உயிர்ச்சத்து C : அஸ்கார்பிக் அமிலம் நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைய உள்ளது. இதன் பற்றாக்குறையினால் எகிர் வீக்க (ஸ்கர்வி) நோய் உண்டாகிறது.

vitamin D : வைட்டமின்-D : கரையக்கூடிய ஒரு கொழுப்புப் பொருள். வைட்டமின்-D. (கால்சிஃபெரால்). வைட்டமின் D, (கோளகால்சிபெரால்) என்ற இரு வடிவங்களில் கிடைக்கிறது. மீன்கொழுப்பு, பால் பொருள்கள் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. குழந்தைக்கணை (ரிக்கெட்ஸ்) நோயை எதிர்க்ககூடியது.

vitamin-E : வைட்டமின் E : வேதியியல் முறையில் தொடர்பு உடைய கூட்டுப் பொருளின் தொகுதி. பன்முகப் பூரிதமா காத கொழுப்பு அமிலங்களின் உறுதித் தன்மையைப் பேணிக்காக்கிறது. இதன் பற்றாக் குறையினால் தசைநலிவு உண்டாகிறது.

vitamin-K : வைட்டமின் к : நீரில் கரையக்கூடிய, ஃபைட்டோ மினாடியோன் பிறந்த குழந்தைக்கு இரத்தக்கசிவு ஏற்படும் போதும் வைட்டமின் K பற்றாக் குறையின்போது கொடுக்கப்படுகிறது. மஞ்சட்காமா லைக்கு ஊசி மருந்தாகச் செலுத்தப்படுகிறது.

vitellin (vitellus) : கருப்புரதம் : முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.

vitiligo : தோல் வெள்ளை நோய் : ஒரு வகைத் தோல் நோய், தன்தடுப்பாற்றல் கொண்டது. தோல் நிறமிகள் முழுமையாக இழப்பதால் ஏற்படுகிறது.

vitrectomy : கண்விழி நீர்ம அறுவை : கண்விழிக் குழியி