பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vitreIlum

1157

Vogt-Koyanagi....


லிருந்து கண்விழி நீர்மத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

vitrellum : விட்ரெல்லம் : உடைத்தவுடன் ஆவிவடிவ மருந்தை வெளிப்படுத்தம் சிறு கண்ணாடி மருந்து உறை.

vitreous : கண்ணாடியாலான் : கண்ணாடி போன்ற, தெளிவான, ஒளி ஊடுருவும் கூழ்மம்.

vitreous body (viterous humour; vitraum) : கண்விழி நீர்மம்; விழிப்படி நீர்மப்பொருள் : கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மம்.

vivax malaria : வைவேக்ஸ் மலைக்காய்ச்சல் மலேரியா : பிளாஸ் மோடியம் வாக்ஸ் உண்டாக்கும் தீவிர (இறுதி நிலை) மலைக் காய்ச்சல்.

vivisection : உயிரணுவைக்கூறு : பரிசோதனை காரணத்துக்காக உயிருள்ள பிராணிகளில் செய்யப்படும் அறுவை முறைகள்.

VLDL : விஎல்டிஎல் : வெரிலோடென்சி(ட்)டி லை(ப்)போ புரோட்டின் என்ற ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துக் குறியீடு. மிகுகுறை அடர்த்தி கொழுபுரதம் சக்தியாகப் பயன் படுத்த அல்லது கொழுப்பாக சேமித்துவைக்கப் படுவதற்காக டிரைகிளிசரைடுகளை திசுக்களுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்தில் இதன் அளவு அதிகமாகும்போது, இதயக் குருதிக் குறை நோய் உண்டாகிறது.

vivonex : விவோனெக்ஸ் : அறுவை மருத்துவக்கு முன்பு ஆறுநாட்கள் வரை தேவையான கலோரி (வெப்ப அலகு), ஊட்டச் சத்து அனைத்தையும் உடலுக்கு அளிப்பதற்காகக் கொடுக்கப்படும் பாகு மருந்தின் வணிகப் பெயர். இது தூள் வடிவில் இருக்கும். இது நீரில் கலந்து பாகு வடிவில் தயாரிக்கப்படுகிறது.

vocal : குரல்சார்ந்த : பேச்சு உறுப்புகள் அல்லது குரல் தொடர்பான.

vocal cords : நாத இதழ்கள்; தொனி இதழ்கள்; குதர் நாண் : குரல்வளை அதிர்வு நாளங்கள். நுரையீரல்களிடையே காற்று செல்லும்போது நாளங்கள் அதிர்வுறுவதால் ஒலி உண்டாகிறது.

vocal fremitus (vocal thrill) : குரல் வளையதிர்வு; நொதிச் சிலிர்ப்பு.

Vogt-Koyanagi syndrome : வோக்ட்-கோயனாகி நோயியம் : விழிக்குழற்படல அழற்சி, விழித்திரைப் பிரிப்பு, வெண் குஷ்டம், சொட்டை, செவிடு