பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wall

1162

Warburg apparatus


குதிகால் நடை : புறநரம்பு நோய் நிலையில் குதிகால் கொண்டு நடத்தல். நடை வார்ப்பு : ஒரு நோயாளி நடமாட உதவும் அமைப்பு.

wall : சுவர் : ஒரு உயிரணு, ஒரு நாளம் அல்லது குழிவறை போன்ற வெளியின் எல்லை அமைப்பு. ஒரு குழிவறையின் எல்லைகள்.

Wallenberg's syndrome : வால்லென்பெர்க் நோயியம் : ஒரு ஜெர்மன் மருத்துவரான அடால்ஃப் வால்லென்பெர்க் பெயரிலமைந்த நோய்த்தொகுதி. மூளைத்தண்டின் கீழ்ப்பகுதிக்கு குருதி வழங்கும், பின் கீழ் சிறு மூளைத் தமனி அல்லது அதன் கிளைகளில் ஒன்று அடைபட்டிருப்பதன் விளைவாக, ஒரு பக்க முகத்தில், வெப்ப, வலிஉணர்வுகள் இழப்பும், மறுபக்க உடல் மற்றும் உறுப்புகளில் இவ்வுணர்வுகளிழப்பு, ஒரு பக்க தள்ளாட்டம், விழுங்கல்வலி, பேச்சுக்குளறல் மற்றும் விழி நடுக்கம் ஏற்படுவது.

Wallerian degeneration : வால்லரின் திசுவழிவு : ஆங்கில மருத்துவர் அகஸ்டஸ் வாலெர் விவரித்தநிலை. அணு உடலிலிருந்து பிரிந்துள்ள நரம்பிழையின் திசு வழிவு அதில் நரம்பணுவரிழை, மச்சையுறைசீர் குலைவு மற்றும் முன்பகுதியில் அருகிலுள்ள ரேன்வியர் கணுவரை நரம்பு அழிந்து, அறுபட்ட பகுதிக்கு துரத்திலுள்ள ஷ்வான் அணுக்கள் சீரணிக்கப்பட்டுள்ளது.

wall eye : கண்சுவர் : 1. திறந்துள்ளபோது குதிக்கும் கண். 2. நிறப்படலம் நிறமின்மை. 3. பளிங்குப் படலத்தின் தடியான மழுங்கல் பகுதி.

Walthard's islets : வால் சிறுதீவு : ஸ்விஸ்நாட்டு மகளிர் நோயியல் மருத்துவர் விவரித்துள்ள நிலை. இதில் சினைப்பையின் முளை புற அணு அடுக்கின் நுண்சேர்மங்கள், அதன் சீரறையில் அல்லது அதனருகே காணப்படுதல்.

Walther's ducts : வால் நாளங்கள் : ஜெர்மன் உடற் கூறியலாளர் அகஸ்ட் வால்டர் பெயர் கொண்ட, நாவடிச் சுரப்பியை வடிக்கும், சிறு நாளங்கள்.

wangensteen tube : விங்கஸ்டீன் குழாய் : இரைப்பைக் குடல் வழி உறிஞ்சுவதற்காகப் பயன்படும் ஊடுகதிர் ஊடுருவாத முனையுள்ள குழாய்.

Warburg apparatus : வார்பர்க் கருவி : ஜெர்மன் உயிர்வேதியியலாளர் ஒட்டோ வார்பர்க் அறிமுகம் செய்த, சிறுதுண்டுத்