பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ward

1163

warner syndrome


திசுவில் ஆக்ஸிஜனேற்பும், கார் பன்டையாக்ஸைடு உருவாக்கத்தையும் தீர்மானிக்கும் நுண் நாள் அழுத்தமானி.

ward : மருத்துவமனைப் பகுதி : ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளை வைப்பதற்கான ஒரு பெரிய கூடம்.

wardrop's operation : வார்டிராப் அறுவை : பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் ஜேம்ஸ் வார்டிராப் பெயரிட்ட அறுவையில் விரி தமனிப்பைக்கு சிறிது தூரத்தில் தமனியைக் கட்டுதல்.

warfarin : வார்ஃபாரின் : குருதிக் கட்டினைத் தடைசெய்யக் கூடிய ஒரு பொருள். இது வாய் வழி உட்கொள்ளப்படுகிறது.

warfarin sodium : சோடியம் வார்ஃபேரின் : விஸ்கான்சின் ஆலம்னி ஆராய்ச்சி நிறுவனத்தின் சுருக்குப் பெயராலமைந்த, கெளமரின் கொண்ட குருதியுறை எதிர்ப்பி.

war gas : போர் வாயு : நச்சுத் தன்மையான அல்லது உறுத்தலான விளைவுகளை உண்டாக்கப் பயன்படும் ஒரு வேதியப் பொருள். அசிட்டைல் கோலி னெஸ்டரேஸை, மீளமுடியாத தசை செய்யும் ஆர்கனோ பாஸ்ஃபேட்டுகள் முக்கிய உதாரணங்களாகும்.

warm antibody haemolysis : மிதவெப்ப எதிர்மிய குருதியழிவு : மிதவெப்ப சிவப்பணு எதிர்மியம் உள்ள தன்(ஏம) காப்பு குருதியழி சோகை. இந்த எதிர்மியங்கள் சிவப்பணுக்களை 37°சி வெப்ப நிலையில் சூழ்ந்தழியச் செய்கின்றன. இந்த நிலை ஏதுவில்லாமல் புற்று, நிணப்புற்று அல்லது சில மருந்துகளின் காரணமாகவோ ஏற்படலாம்.

warm blooded : வெப்பக்குருதியமை : மனிதர்கள் மற்ற பாலூட்டியினங்கள், பறவைகளில் காணப்படும் ஒரளவு மிகையான நிலையான உடல் வெப்ப நிலை கொண்ட.

warm shock : மிதவெப்பத்தாக்கம் : சீழ்க்குருதித்தாக்கக் காய்ச்சல் நோயாளிகள், தாழ்இரத்த அழுத்தமுடன், ஆரம்ப நிலைகளில் மித வெப்பமுடனிருத்தல்.

warner syndrome : வார்னர் நோய் : குமரப்பருவத்தில் இளம் வயதினருக்கு உண்டாகும் நோய். இதனால் தலைமுடி நரைக்கும். குள்ள உருவம் உண்டாகும். நசுங்கிய முகம் ஏற்படும்; முடி உதிரும், நீரிழிவு நோய் உண்டாகும்; மூட்டுத் துடிப்பு ஏற்படும். அடிக்கடி கருச்சிதைவு உண்டாகும். குழந்தைகள் இறந்து பிறக்கும்.