பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wart

1164

wasserhelle


wart : பாலுண்ணி (கழலை); மரு : உடம்பில் உண்டாகும் புறச் சதை வளர்ச்சி, கரணை.

Wartenberg's sign : வார்ட்டென் பெர்க் அறிகுறி : பரிசோதிப்பவரின் மடங்கிய விரல்களுடன் பூட்டிய மடங்கிய விரல்களை இழுத்துத் தள்ளும்போது, இயல்பாக நோயாளியின் பெருவிரல் நீள்கிறது. (மூளையின்) கோபுரப்பகுதி பாதிப்பில் பெருவிரல் உள்வாங்கி மடங்கு கிறது. அமெரிக்க நரம்பியல் மருத்துவர் ராபர்ட்வார்ட்டென் பெர்க் விவரித்த நிலையிது.

Warthin Frinkeldey cells : வார்த்தின் பிரின்கெல்டே அணுக்கள் : மணல்வாரி அம்மையில், மிகு வளர் நிணத்திசுவில் உள்ள, வலை உள் அணு அடுக்குப் பேரணுக்கள்.

Warthin's tumour : வார்த்தின் கட்டி : புறஅணுஅடுக்கு மற்றும் நினத்திசுக்களையும் கொண்ட, கண்ணச் சுரப்பியின் சுரப்பி நிணப்புற்று, கன்னச் சுரப்பியின் கீழ்ப்பகுதியில், மெதுவாக வளரும் வலியில்லாத வீக் கத்தை உண்டாக்குகிறது.

wash : கழுவல் : உடல் முழுவதும் அல்லது ஒரு பகுதியை சுத்தம் செய்தல். கண் அல்லது வாய் போன்ற ஒரு பகுதியை குளிப்பாட்ட அல்லது சுத்தப்படுத்தப் பயன்படும் ஒரு கரைசல்.

washed red cells : செவ்வணுக்கள் : கிருமி நீக்கிய உப்பு நீரால் கழுவுவதன் மூலம்' பெரும்பாலான வெள்ளணுக்கள் நீக்கப்பட்ட பிறகு சிவப்பு இரத்த அணுக்கள் உள்ளேற்றுவது. IgA குறைவான நோயாளிகளில் பலன் தருகிறது.

washerwoman's fingers : வண்ணாத்தி விரல்கள் : நீரிழப்பு நிலையிலும் வெகுநேரம் குளிர் நீரல் முங்கியிருப்பதாலும், குளிர்ந்து வெளுத்து சிறிது கருங்கிய தோல்.

washerwoman's itch : வண்ணாத்திப்படை : சோப்புகள் மற்றும் தூய்மைப்பொருள் பட்டதால் சலவைத் தொழி லாளர்கள் கைகளில் தோல்படை.

washing soda : சலவைக் காரம் : சோடியம் கார்போனேட்.

wasp : குளவி : மென்தாள் போன்ற நான்கு சிறகு கொண்ட பூச்சி. குளவிக்கடி : குளவி கொட்டியதால் விஷம் தோலில் வலியுடன் கூடிய காயம் ஏற்படுதல்.

wasserhelle : நீர்தெளிவணு : தைராயிடு பக்கச் சுரப்பி முதன்மை அணுக்கள் நீர் தெளிவு அணுக்கள் என குறிப்பிடப்படுகின்றன.