பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

weal

1167

Weber's syndrome


weal : காஞ்சொறி புடைப்பு; நீர்க் கொப்புளம் : காஞ்சொறித் தடிப்பில் ஏற்படும் புடைப்பு வீக்கம்.

wean : தொடராமல் நிறுத்து : முனைப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒரு குழந்தைக்கு மற்ற உணவுகளை மாற்றாகக் கொடுத்தல். மூச்சூட்ட ஆதரவை தொடராமல் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துதல்.

weaning : தொடராமல் நிறுத்தல் : 1. குழந்தைக்கு முலைப்பால் கொடுப்பதை நிறுத்தி மாற்றுணவு கொடுத்தல், 2. விசைப் பொறி ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிலெடுக்கும் செயல்முறை.

weanling : பால்மறப்புப்பிள்ளை : அண்மையில் பால்குடி நிறுத் தப்பட்ட பிள்ளை.

weasand : தொண்டை; மூச்சுக் குழல்.

weaver's bottom : நெசவாளர்புட்டம் : புடை-புட்ட உயவுப் பை அழற்சியால் இருக்கையெலும்புக் கழலைகளின் மேல் வலியும், தொடுவலியுமிருப்பது, உட்காரும்போதும் படுக்கும் போதும் அதிகமாகிறது தையற் காரர்புட்டம்.

web : கிடைச்சவ்வு : ஒரு வெளி குறுக்காகப் பரவியுள்ள சவ்வு அல்லது திசு.

webbed : இடைத்திசு கொண்ட : அடுத்துள்ள அமைப்புகளை இணைக்கும் சவ்வு அல்லது திசு கொண்ட.

weber-christian disease : வீபர்- கிறிஸ்டியன் நோய் : ஆங்கில மருத்துவர் ஃப்ரெடரிக் வீபர் மற்றும் அமெரிக்க மருத்துவர் ஹென்றி கிறிஸ் டியன் பெயர்கள் கொண்ட நோயில் பரவலான கொழுப்பு வளர்ச்சி மாற்றத்தில் காணப்படும், தோலடித்திசுவில் நடுக் குழியமைந்த திரும்பவரும் காய்ச்சலும் சீழ்கொள்ள கணுக்களும் உள்ளன.

Weber's disease : வீபர் நோய் : ஆங்கில மருத்துவர் ஃப்ரெட ரிக்iபர் விவரித்த ஒரிடமேல் தோலழிவுப் பெருங்கொப்புளம்.

Weber's glands : வீபர்சுரப்பிகள் : ஜெர்மன் உடற்கூறியலாளர் மாரிட்ச் வீபர் விவரித்த, நாக்கின் வெளி ஓரங்களிலுள்ள சீதச்சுரப்பிகள்.

Weber's syndrome : வீபர் நோயியம் : ஆங்கில மருத்துவர் ஹெர்மன் வீபரின் பெயர் கொண்ட இணை நோய். ஒரு பக்க கண் தசை செயலிழப்பும் மறுபக்க முகம், கை, கால் ஆகியவற்றின் செயலிழப்புக்குக் காரணம் மூளைத்தண்டில் கோபுரத் தட பாதிப்பாகும்.