பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

andursil

116

angina


பெண்களிடம் இது ஆண் தன்மையை வளர்க்கின்றன.

andursil : ஆண்டுர்சில் : அலுனியம் ஹைட்ராக்சைடும் மக்னிசியம் ஹைட்ராச்சைடும் கலந்த கலவையின் வணிகப் பெயர். இது புளிப்புமாற்று மருந்தாகவும் வயிற்றுப்பொருமல் அகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.

anemometer : வளிவேகமானி.

anencephaly : மெலி மூளை; மூளையின்மை : கருவிலேயே மனித இயல்பு இல்லாதிருத்தல். இது வாழ்க்கைக்கு ஒவ்வாத நிலை. கருவை அடுத்துச் சுற்றி உள்ள சவ்வில் சுரக்கும் திரவத்தில் ஆல்ஃபாஃபெட் டோபுரட்டீன் அதிக அளவில் இருப்பதைக் கொண்டு இது கண்டறியப்படுகிறது.

anergy : ஆற்றல்குறை; வலுக்குறை; வலுவிழப்பு : 'T' அணுக்களின் எண்ணிக்கை குறைவது.

anerythroplasia : சிவப்பணு உருக்குறைவு : இரத்தச் சிவப்பணு உருவாவதில் இடர்பாடு. இரத்தச் சிவப்பணு இல்லாமை.

anerythropoiesis : சிவப்பணுக் குறைவு : இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவில் குறைதல்.

anethaine : அனித்தைன் : 'அமித்தோக்கைன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

aneurine : நரப்பூட்டச் சத்து (அனிரின்); சிறுநீரின்மை : சத்துக் குறைபாட்டால் நரம்புகள் சீர் கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம். தையாமின் அல்லது வைட்டமின் B ஊட்டச்சத்தின் பழைய பெயர்.

aneurysm : குருதிநாள அழற்சி : குருதி நாளம் (தமனி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தமனிச் சுவரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது.

angiectomy : இரத்த நாள வெட்டு : இரத்த நாளத்தை அகற்றல், இரத்த நாளத்தை நீக்கும் முறை.

angiectasis : குருதி நாள அழற்சி; குருதிக் குழாய் தளர்ச்சி : இரத்த நாளங்கள் இயல்புக்கு மீறி விரிவடைந்திருத்தல்.

angiectopia :இரத்த நாளப் பாதைப் பிறழ்ச்சி; குருதி நாளம் அமைப்புப் பிறழ்ச்சி குருதி; ஒரு இரத்த நாளம் இயல்பிலா இடத்தில் இருப்பது அல்லது இயல்பிலா பாதையில் அமைந்திருப்பது.

angina : தொண்டை அடைப்பு; இதயவலி; நெஞ்சுவலி : இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக