பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Weigert's stain

1169

well's syndrome


Weigert's stain : வெய்கெர்ட் சாயம் : ஜெர்மன் நோய்க்கூறியலாளர் கார்ல் வெய்கெர்ட் வடிவமைத்த, நுண்ணுயிர்கள் மற்றும் ஃபைப்ரின் கிராம் சாயமேற்கும் முறை.

Weil-Felix reaction : வெய்ல்-ஃபெலிக் ஸ் எதிர்வினை : ஆஸ்திரிய நுண்ணுயிரியலாளர் எட்மன்ட் வெய்ல் மற்றும் ஜெர்மன் நுண்ணுயிரியலாளர் ஆர்தர் ஃபெலிக்ஸ் நோயை கண்டு பிடிக்கும் ஊநீரியல் சோதனை.

Weil's disease : வெயீல் நோய் : ஜெர்மன் மருத்துவர் அடால் ஃப்வெயில் பெயர் கொண்ட லெப்டோஸ்பைரா இன்டெர் ராகன்ஸின் பல்வேறு ஊநீர் வகைகளில் ஏதாவதொன்றால் உண்டாகும் கல்லீரல் அணுக்கள் பாதிப்புடன்கூடிய லெப்டோஸ்பைரா நோய்.

weils-Felix test : வைல்ஃபெலிக்ஸ் சோதனை : நச்சுக் காய்ச் சல்களைக் கண்டறியப் பயன் படுத்தப்படும் குருதியணு ஒட்டுத் திரட்சி வினை சோதனை.

Weinberg's test : Gloulücissouffé சோதனை ஃபிரெஞ்சு நோய்க் கூறியலாளர் மைக்கேல் வெய்ன் பெயர் கொண்ட ஹைடேட் டின் நோயறிய செய்யப்படும் நிரப்புப் பொருள் நிறுத்தும் சோதனை.

Weingarten syndrome : வெய்ன் கார்ட்டன் நோயியம் : ஜெர்மன் மருத்துவர் வெய்ன் கார்ட்டன், இந்தியாவில் மதனபள்ளியில் இருந்தபோது விவரித்த, நாட்பட்ட இருமல், இரவுநேர பிரி மூச்சுக்குழாய் சுருக்கம் மற்றும் நுரையீரல் பாதிப்பு கொண்ட வெப்ப நாட்டு நுரையீரல் சார் இயோசின் ஏற்பணு மிகைப்பு.

Weir's operation : வெய்ர் அறுவை : அமெரிக்க அறுவை மருத்துவர் ராபர்ட் வெய்ர் பெயர் கொண்ட குடல்வால் திறப்பு அறுவை.

Weismannism : வெய்ஸ்மான்னிசம் : பிறப்பிற்குப் பின் பெறப்பட்ட குணநலன்கள், பரம்பரையால் வந்ததல்ல என்று கூறும் ஜெர்மன் உயிரியலாளர் ஆகஸ்ட் வெய்ஸ்மான் கண்டு பிடித்த கொள்கை.

Weiss test : வெய்ஸ் சோதனை : அமெரிக்க மருத்துவர் மாரிஸ் வெய்ஸ் பெயர் கொண்ட, சிறுநீரில் யூரோகுரோமோஜன் இருப்பதைக் காணும் சோதனை.

well's syndrome : “வெல்" Graëll I வரால் விவரிக்கப்பட்டது. தோலில் ஒவ்வாமை காரணமாகத் திட்டுத் திட்டாகத் தென்படும் படை கழிவு நீரில் வேலை பார்ப்பவர்களுக்கு உண்டாகும் காய்ச்சலுடன் கூடிய காமாலை நோய்.