பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Wershof's disease

1170

West Nile fever


Werlhof's disease : வெர்ல்ஹாஃப் நோய் : ஜெர்மன் மருத்துவர் பால் வெர்ல்ஹாஃப் பெயர் கொண்ட ஏதிலா குருதி உறைவணுக் குறைநோய்.

Wermer's syndrome : வெர்மெர் நோயியம் : அமெரிக்க மருத்துவர் பால் வெர்மெர் முதலில் விவரித்த, பல நாளமில் சுரப்புப் புது வளர்ச்சி.

Wernicke's area : வெர்னிக்கே பரப்பு : மூளையின் பெருமூளை இடது அரைக்கோள மேல் பொட்டு மடல் மற்றும் அடுத்துள்ள பக்கமடலில் ஒரிடப் பரப்பு.

Wernicke's encephalopathy : வெர்னிக்கே மூளைநோய் : தையமின் குறைவால் மூளை பாதிப்பால் திடீரென்று ஒரு மது அடிமை நோயாளி மனக் குழப்பத்துடன் கண் இயக்க பாதிப்புடன் தோன்றுவது.

wertheim's hy sterectomy : வெர்த்தைம் கருப்பை அறுவை : கருப்பை வாயில் ஏற்படும் புற்றினை அகற்றுவதற்காகச் செய்யப்படும் ஒரு விரிவான அறுவை மருத்துவம். இதன் மூலம், கருப்பை வாய், மேல் யோனிக் குழாய்கள், கருவகங்கள், கீழ் நிணநீர்ச்சுரப்பிகள் ஆகியவை அகற்றப்படுகின்றன.

Wertheim's operation : வெர்த்தீம் அறுவை :' ஆஸ்திரிய மகளிர் நோய் மருத்துவர் எர்னெஸ்ட் வெர்த்தீம் பெயராலமைந்து, கருப்பைக் கழுத்துப் புற்று நோய்க்கு,முழு கருப்பை நீக்கம்.

Wertheim-Schauta operation : வெர்த்தீம்-ஸ்சாட்டா அறுவை : ஆஸ்திரிய மருத்துவர்கள், எர்னெஸ்ட் வெர்த்தீம் மற்றும் ஃப்ரெட்ரிக் ஸ்சாட்டா பெயரால் பிதுக்கத்துக்கான அறுவையில், சிறுநீர்ப்பைக்கும் யோனிக்கால் வாய்க்கும் இடையே கருப்பையை இடநிறுத்தல்.

Westermark's sign : வெஸ்டெர்மார்க் குறி : மார்பு எக்ஸ்ரே படத்தில், நாளக் குருதிக்குறை, சேய்மக் குருதியுறை அடைப்பு.

Western blotting : மேற்கத்திய செய்முறை : கூழ்ம நிலையிலிருந்து நைட்ரோ செல்லுலோசுக்கு மாற்றுவதன் மூலம், புரதவிளைவியத்தை ஆய்வு செய்யும் செய்முறை.

West Nile fever : மேற்கு நைல் காய்ச்சல் : எகிப்திலும், ஆஃப்ரிக் காவிலும் காணப்படும் ஆர்போ வைரஸ் தொற்று. அதில் காய்ச்சலும், தோல் கட்டி, மூளை தொற்றும் இருக்கும்.