பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Whipple's disease

1172

White's operation


மோதல்களிலும் பொதுவாக காணப்படுகின்றன.

Whipple's disease : விப்பிள் நோய் : அமெரிக்க நோய்க் கூறியலாளர் ஜார்ஜ் விப்பிள் பெயர் கொண்டு குடல்கொழுப்பு நலிவு நோய், உள் உறிஞ்சல் கோளறு, எடைகுறைவு, நிணக்கணு வீக்கம், முட்டு வலியாக வெளிப்படுகிறது.

Whipple's operation : விப்பிள் அறுவை : அமெரிக்க அறுவை மருத்துவர் ஆலென் விப்பிள் கண்டுபிடித்த, கணைய முன் சிறுகுடல் முழு அறுவை நீக்க முறை.

Whipple's triad : விப்பிள்மும்மை : கணையத்தின் இன்சுலின் சுரக்கும் சிறுதீவணுக்கட்டி, திடீர் தாகம் இரத்த சர்க்கரை மைய நரம்பு மண்டல அல்லது நாளவியக்க அறிகுறிகளோடு தோன்றுகிறது. சர்க்கரை உள் எடுத்தவுடன் அறிகுறிகள் மறைகின்றன.

whipworm : சாட்டைப்புழு : ஈரம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் மனிதரைப் பீடிக்கும் உருண்டைப் புழு. இதன் முட்டைகள் மலத்துடன் வெளியேறும். இது 1000-க்கு மேல் பீடித்தால் இரத்தபேதி, குருதிச் சோகை, பெருங்குடல் இறக்கம் ஏற்படும்.

whisper : தாழ்குரல்பேச்சு : குரல் நாண்களை பயன்படுத்தாத பேச்சு, அதிர்வின்றி குரல் நாண்கள் விறைப்பாயிருந்தாலும், பற்கள், நாக்கு, உதடுகள் அண்ணம் ஆகியவை வெளியிடும் மூச்சின் மெல்லிய ஒலியை, இயல்பான பேச்சுபோல் மாற்றுகின்றன.

white heed's varnish : நச்சு நீக்கு மருந்து : காயங்களுக்கு நச்சு நீக்கு மருந்தாகவும், காப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் அயோடோஃபார்ம், பென்கோயின் ஆகியவை ஈதரில் கலந்த கரைசல்.

whit fluids : வெண் திரவங்கள் : நீரில் கரைந்துள்ள கீல் அமிலங்கள், ஃபினால்கள் ஆகியவற்றின் பசைக்குழம்பு. கிருமி நீக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

white leg : கால்வீக்க நோய் : பெண்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் குருதி நாள வீக்க நோய்.

whites : வெள்ளை : பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து பசை போன்ற வெள்ளைப் போக்கு (வெண்கசிவு) ஏற்படும்.

White's operation : ஒயிட் அறுவை முறை : அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம்