பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Whitehead's operation

1173

wood syndrome


ஒயிட் பெயர் கொண்ட முறையில் புராஸ்டேட் முன்னிலைச் சுரப்பி மிகை வளர்ச்சிக்கு, விரைகளை அறுத்து நீக்குதல்.

Whitehead's operation : ஒயிட் ஹெட் அறுவை முறை (இங்கிலீஷ்) : அறுவை மருத்துவர் வால்டர்ஒயிட்ஹெட் பெயர் கொண்ட மூலநோய் அறுவை நீக்கம்.

Whitfield's ointment : ஒயிட் ஃபீல்டு களிம்பு : பிரிட்டிஷ் தோல் நோய் மருத்துவர் ஆர்தர் ஒயிட்ஃபீல்டு பெயர் கொண்ட சதசாலிசிலிக் அமிலம், சேத பென்சாயிக் அமிலம் பெட்ரோலியத்தில் சேர்த்த களிம்பு.

Whitlow : நகச்சுற்று : கை அல்லது கால் விரலின் இறுதி விரலெலும்பின் ஆழ்திசுக்களின் அழற்சி வழக்கமாக சீழ்பிடித்து முடிகிறது.

Whitman's operation : விட்மன் அறுவை முறை : அமெரிக்க முட நீக்கியல் அறுவை மருத்துவர் ராயல் விட்மன் பெயர் கொண்ட, இடுப்பு முட்டின், மூட்டுச் சீரறுவை.

white's tar paste : வெண்கீல்ப்பசை : 6% கரி எண்ணெய் (கீல்) சேர்ந்த துத்தநாகப் பசை, குழந்தைகளின் படை நோய்க்குப் பயன்படுகிறது.

womb : கருப்பை; சூற்பை; கருவகம்.

wood's light : புறவூதா ஒளி : படர்தாமரை நோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தனி வகைப் புறவூதா ஒளி.

WHO : உசி.நி. : ஜெனிவாவைத் தலைமையிடமாக கொண்ட உலக சுகாதார நிறுவனம்.

whole blood : முழு இரத்தம் : உறை வெதிர்ப்பி கொண்ட வேறுவகையில் மாற்றமில்லாத இரத்தம் உள்ளேற்றப் பயன் படுத்தப்படுவது.

whole body counter : முழுஉடல் கணிப்பி : முழுஉடலிலும் உள்ள கதிரியக்கத்தை கண்டுபிடிக்கும் கருவி.

whole bowel irrigation : முழுக் குடல் நீர்க் கழுவல் : குடல் பகுதிக்குள், சமனிலை மின் அயனிகள் கொண்ட கரைசல்களை உட்செலுத்தி விசையோடு பாய்ச்சுதல், நஞ்சிடப் பட்ட நோயாளிகளில் நச்சுப் பொருட்கள் உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்குள் வெளியேற்ற பாலிஎத்திலின் உப்புகள் கொண்ட கலவையை பெருமளவில் உட்செலுத்தல்.

wood syndrome : மதமதப்பு நோய் : அசைவிலாச் சோர்வு நோய். உடல்சோர்வு, இடது வெளிப்பகுதி இடறுதல்