பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

whoop

1174

Wilder's sign


போன்ற உணர்வு, தலை கிண்ணென்று இருத்தல் ஆகியவற்றுடன் கூடிய எதிலும் ஈடுபாடற்ற மனச்சோர்வு நிலை.

whoop : கக்கல் ஒலி : கக்குவான் இருமலில் ஒசையுடன் கூடிய கட்டுப்படுத்த முடியா உள் வாங்கும் மூச்சு.

whooping cough : கக்குவான் இருமல் : மூச்சுப்பாதை சளி கோர்ப்பு மற்றும் வந்துவந்து போகும், வலுவான உள் முச்சில் முடியும் இருமல் ஆகியவை கொண்ட போர்டெட் டெல்லா பெர்ட்டசிஸ் தொற்று சிகிச்சை யெடுத்துக் கொள்ளாத தொற்று நோயாளிகளின் சளித்துளிகள் மூலம் கிருமி பரவுகிறது. நோயின் அடைகாலம் 7 முதல் 14 நாட்கள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கக்குவான் காணப்படுகிறது. அதில் ஒவ்வொன்றும் இரண்டு வாரம் வரையிருக்கும், நீர்க்கோப்பு, இருமல், சுகமடைதல் என மூன்று நிலைகள் உள்ளன. நோயின் சிக்கல்களாவன நடுக்காது அழற்சி, நிமோனியா, பிரி மூச்சுக்குழாய் வீக்கம், மார்புக் காற்று தேக்கம், வலிப்புகள், மூளைபாதிப்பு, எரித்ரோமைசின் கொண்டு சிகிச்சை தரப் படுகிறது. தடுப்பூசி மூலம் இதைத் தடுக்க முடியும்.

whorl : திருகு சுருள் : தோல் வரிமேடுகளில் போல் ஒரு அச்சின்மேல் புள்ளியைச் சுற்றி உள்ள ஒத்த பகுதிகளின் வட்ட வரிசையமைப்பு, விரல் ரேகைகள் போன்ற சுருள் அமைப்பு தோற்றம் தருகிறது. உட்காது நத்தையெலும்பு அல்லது மூக்கின் எலும்பு மடிப்பு. இதயத் தசையிழைகளின் சுருள் அமைப்பு.

wide complex arrhythmia : விரிநிலைத்தொகுதி இதயத்துடிப்புக் கோளாறு : இதய அணுக்களில் சோடியம் வாயில்கள் அடைபடுவதால் விளையும் இதயமின் வரைவில் Q, R, S தொகுதி விரிந்து உள்ளநிலை, சோடியம் பைகார்பனேட் கரைசலை சிரைவழி உட்செலுத்தினால் சீரடைகிறது. டிரைசைக்ளிக் சோர்வை திப்பிகளை அதிக அளவில் கொடுப்பதால் சைனல் மிகு இதயத் துடிப்பு, Q, R, S இடைவெளி மிகவும் நீண்டுள்ளது.

widow's hump : விதவை திமில் : எலும்பு மெலிதல் காரணமாக, முள்ளெலும்பு அழுத்தித் தட்டையாவதால், முதுகுக் கூனலும், கழுத்துப் பகுதி முன் குவியலும் ஏற்படும்.

Wilder's sign : வில்டெர்குறி : அமெரிக்க கண்மருத்துவர் வில்லியம் வில்டெர் பெயர் கொண்ட கிரேப் நோயின்