பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wild type

windpipe


ஆரம்ப அறிகுறி. விழிக்கோளம் உள்வாங்கும்போது அல்லது . வெளி வாங்கும்போது மெதுவான துடிப்பை வெளிக் காட்டுகிறது.

wild type : மூர்க்க வகை : இயற்கையில் இயல்பாக உள்ள மரபணு வடிவம்.

William's syndrome : வில்லியம் நோயியம் : காரை எலும்புக்கு மேலுள்ள மகாதமனிக் குறுக்கம், புறப்பகுதி நுரையீரல் தமனிக் குறுக்கம், அத்துடன் மனவளர்ச்சிக் குறை குள்ளன் முகம் கரகரப்பான குரல் மற்றும் வீண்பேச்சும் ஆளுமை எல்லாம் இணைந்த நோய்நிலை.

Willis' circle : வில்லிஸ் வட்டம் : மூளையின் அடிப்பகுதியில் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் கண்நரம்புத் தடகுறுக்கமைவைச் சுற்றி வளைத்து உள் கழுத்துத் தமனிமுன் மற்றும்பின் மூளைத் தமனிகள். முன் மற்றும் பின் தொடர்புத் தமனிகளின் பின்னலிணைப்பு, ஆங்கிலேயே உடற் கூறியலாளர் தாமஸ் வில்லிசின் பெயர் கொண்டது.

Widal test : குடற்காய்ச்சல் சோதனை : குடற்காய்ச்சல் (டைஃபாய்டு) நோய்க்கான குருதியணு ஒட்டுத் திரள்வினைச் சோதனை.

wilms tumour : குழந்தைக் கழலை : பொதுவாகக் குழந்தைகளின் அடி வயிற்றுக்குள் உண்டாகும் கட்டி இது பெரும்பாலும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முந்திய பருவத்தில் பீடிக்கும், கழலையின் தன்மையையும், குழந்தையின் வடிவத்தையும் பொறுத்து இதற்கு மருத்துவமளிக்கப்படுகிறது.

Wilson's disease : வில்சன் நோய் : கல்லீரல்-பித்தநீர் நாளச் சிதைவினால் உண்டாகும் நோய், தாமிர வளர்சிதை மாற்றச் சீர்குலைவு காரணமாக வாத வலிப்பு ஏற்படும். மன வளர்ச்சிக் குறைபாட்டினால் இது உண்டாகிறது.

winter vomiting disease : கால வாந்தி நோய் : எங்கும் உள்ள ஒரு நோய். இந்நோயை உண்டாக்கும் கிருமி இன்னும் அடையாளம் காணப்பட வில்லை. இது உணவு நஞ்சாவதற்கு வழி வகுக்கிறது.

windburn : காற்று எரிதோல் : மிகவும் காற்றடிப்பால் தோல் உரிந்து சிவந்து உறுத்தும்நிலை.

windpipe : மூச்சுக்குழாய் : நீண்ட, ஒல்லியான வளையக் கூடிய உலோக அமைப்பு.