பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



X

X : எக்ஸ்(x) : அறியாத ஒரு அளவின் குறியீடு.

xanthelasma : இமை மஞ்சள் தழும்பு; மஞ்சள்விழி வெண்படலம்; மஞ்சள் தட்டு : கண்ணிமைகளில் தோன்றும் மஞ்சள் நிறம் உள்ள சிறிய வீக்கத் தழும்புகள்.

xanthemia : மஞ்சள் குருதி : 1. இரத்தத்தில் சிவப்பு நிறப் பொருளிருத்தல், 2. குருதியில் கெரட்டீன் மிகை.

xanthine : சாந்தைன் : நுரையீரல், தசை, கணையம், சிறுநீர் யாக்சிப்பூரின். இதன் சில வழிப் பொருள்கள் சிறுநீர்க் கழிவைத் தூண்டக்கூடியவை. தசைத் திசுக்களை, குறிப்பாக இதயத் தசைத் திசுக்களை தூண்டிவிடும் இயல்புடையது.

xanthinuria : சிறுநீர் சாந்தை குறைபாடு : சிறுநீரில் சாந்தைன் ஆக்சிடேஸ் என்ற இயக்குநீர் குறைவாக இருத்தல். இது மிக அரிதாகத் தோன்றும் ஒரு பரம்பரை நோய்.

xanthochromia : மஞ்சள் நிற சேமிப்பு : தோல் அல்லது மூளை தண்டுவட நீரின் மஞ்சள் நிறமாற்றம்.

xanthochromic : மஞ்சள் நிற : மூளை தண்டுவட நீர் மஞ்சள் நிறமாற்றம் பெற்றுள்ள.

xanthocyanopsia : மஞ்சள் நீலக் காட்சி : சிவப்பு, பச்சையை அறியாமல், மஞ்சள், நீலம் மட்டும் காணும் ஒருவகை நிறக்குருடு.

xanthocyte : மஞ்சள் நிற அணு : மஞ்சள் நிறமி கொண்ட உயிரணு.

xanthoderma : மஞ்சள் தோல் : தோல் மஞ்சள் நிறமாயிருத்தல்.

xanthoma : மஞ்சள் தோல்; மஞ்சள் திட்டு; கொழுப்புத் திரட்சி : தோலுக்கடியில் கொழுப்புப் பொருள் (கொழுப்பிணி) திரண்டிருத்தல். இதனால் மஞ்சள் நிறவேறாக்கம் ஏற்படுகிறது.

xanthomatosis : மஞ்சள் நிற மிகை : 1. இரத்தத்தில் கொலஸ் டிரால் மிகையுடன் கொழுப்புப் பொருட்களின் மாறுபட்ட வளர்சிதை மாற்றம் காரணமாக உள்ளுறுப்புகளில் மிக அதிக கொழுப்புகள் திரண்டிருத்தல். 2. பரவலான அல்லது பல நிலை மஞ்சள் நிறமிகை.