பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xanthopsia

1181

X disease


xanthopsia : மஞ்சள் காட்சி : எல்லாப் பொருட்களும் மஞ்சள் நிறமாகத் தோன்றும் இயல்பு மாறிய பார்வை.

xanthopsin : சாந்தோப்சின் : ரோடாப்சின் மேல் ஒளி படர்வதால் ஏற்படும் கருத்தசிவப்புப் பார்வை.

xanthopsis : மஞ்சள் திசு சீரழிவு : புற்று நோயில் சீரழிந்த திசுக்களின் மஞ்சள் நிறமாற்றம்.

xanthorrhoea : மஞ்சள் போக்கு : யோனிப்புழையிலிருந்து மஞ்சள் நிற வெளிப்பாடு.

xanthosarcoma : மஞ்சள் தசை புற்று : தசை நாருறையின் பேரணுக்கட்டி.

xanthosis : மஞ்சளாதல் : குருதிக் கெரோட்டீன் மிகையில் காணும் தோலின் மஞ்சள் நிறமாற்றம்.

xanthurenic acid : சாந்தூரணிக் அமிலம் : பைரிடாக்ஸின் குறையில் சிறுநீரில் அதிக அளவில் தோன்றும் ஒரு டிரிப்டோ ஃபேனின் சிறுசிதை பொருள்.

xanthuria : மஞ்சள் சிறுநீர் : சிறுநீரில் சாந்தின் அதிக அளவில் வெளியாதல், சிறுநீரில் சாந்தின் மிகை.

X axis : எக்ஸ் அச்சு : கிடைக்கோடாக உள்ள எக்ஸ் அச்சு. இந்த அச்சில் கிடைக்கோடும் நெடுக்கோடும் குறுக்கிடுகின்றன.

X body : எக்ஸ் உடலம் : லேங் கெர்ஹேன் அணுகுருணைத் திசுவில் பெருவிழுங்கணுவில் உள்ள உயிரணுக்கூழ்ம உட் பொருட்கள்.

X cells : எக்ஸ் உயிரணுக்கள் : விழித்திரையின் முக்கியமாக நடுவிலுள்ள நரம்பு முடிச்சனுக்கள். பெரிய பொருட்களைப் பார்க்க இவை தேவைப்படுகின்றன.

X chromatin : எக்ஸ் குரோமோட்டின் : உயிரணுப்பிளவின்போது உட்கருப் பொருட்கள் பாலணு குரோமோசம்கள்.

X chromosome : இனக்கீற்று எக்ஸ் குரோமோசம் : பெண் பாலின குணவியல்புகளைத் தீர்மானிக்கும் குரோமோசம் (நிறக்கீற்று).

X chromosome inactivation : இனக்கீற்றை எக்ஸ் (குரோ மோசம்) செயலற்றதாக்கல் : வளர்கருவின் ஆரம்ப வளர்ச்சி நிலையில் இரண்டு பெண் பாலின எக்ஸ்குரோமோசம்களில் ஏதோ ஒன்றை செயலற்ற தாக்கல்.

X disease : எக்ஸ் நோய் : அஃப் லாடாக்ஸிகோஸின் தயாரிக்கும் ஆஸ்பெர்ஜில்லஸ்