பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xenobiotic

1182

Xenopsylla


ஃப்ளேவஸ் பற்றிய நிலக்கடலையை உண்பதால் உண்டாகும். அஃப்லா டாக்ஸின் நச்சமைவு.

xenobiotic : உயிர் வேற்றுப்பொருள் : ஒரு உயிர்ப்பொருளுக்கு வேற்றாக உள்ள ஒரு செயல்படும் வேதிப்பொருள்.

xenodiagnosis : அயல்நோயறிதல் : நோயாளிக்கு தொற்றாத நோய்க்கடத்திகளைக் கொடுத்து, பூச்சிகள், உண்ணிகள் அல்லது நோய்க்கடத்திகளால் உண்டாகும். நோய்களை உயிரியல் முறையில் கண்டறிய தொற்று உள்ளதா என அவைகளை பரிசோதித்தல்.

xenogeneic : வேற்றின திசு : 1. வேற்றினத் திசு தொடர்பான. 2. உறுப்பு மாற்று அறுவையில் பயன்படும், வேற்றின நபர்களிடமிருந்து பெறும் திசுக்கள்.

xenogenesis : வேற்றினப் பிறப்பு : 1. பெற்றவரிடமிருந்து வேறு பட்ட வழிமரபுப் பிறப்புகள். 2. வேறு குணப்பிறப்பு.

xenogenic : அயற்பிறப்புசார் : உயிரினத்துத்துக்குள்ளே செலுத்தப்பட்ட அயற்பொருளில் இருந்து அல்லது உயிரினத்துக்கே வெளியே உருவாகும்.

xenogenous : அயற்பொருள் சார்ந்த : அயற்பொருள் உண்டாக்கிய

xenology : வேற்றியல் : ஒட்டுண்ணிகள் மற்றும் அவற்றின் ஏற்பாளர்களைப் பற்றிய அறிவியல்.

xnomenia : மாதவிடாய்கோளாறு : மாதவிடாய் நின்று போவதால் ஏற்படும் குருதிக் கசிவால் உண்டாகும் கோளாறு.

xenon : செனோன் : ஒர் அரிதான வேதியியலில் மந்தமான, எடை மிகுந்த வாயுத் தனிமம். இது பொதுவான உணர்ச்சியின் மையை உண்டாக்கக்கூடியது.

xenoparasite : அயல்ஒட்டுண்ணி : வலுவிழந்த நபர்களில் மட்டும் ஒட்டுண்ணியாக வாழும் உயிரினம்.

xenophobia : அயல்வெறுப்பு : அயல் வழக்கங்கள் மற்றும் அயலார் பற்றி அறிவுக் கொவ்வாத பயம்.

xenophonia : வேற்றுக்குரல் : குரலின் தன்மை மாற்றம்.

xenophthalmia : அயல்பொருள் கண்நோய் : கண்ணில் அயல் பொருள் இருப்பதால் உண்டாகும் அழற்சி.

Xenopsylla : செனோப்சில்லா : எலிகளிடமிருந்து மனிதனுக்கு பிளேக் கிருமியை பரப்பும் தெள்ளுப்பூச்சியில் ஒரு இனம். பொது உதாரணம், எலித்