பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

yellows

1189

Y-linked




மஞ்சள் புள்ளி

புறத்திரைக் கூர்நோக்கிடப் புள்ளி.

yellows : மஞ்சட்காமாலை.

Y fork : ஒய் கவடு : இரண்டாகப் பெருகும் டிஎன்ஏ மூலக்கூறில் உள்ள ஒய்வடிவப் பகுதி.

yellow marrow : மஞ்சள் மச்சை : எலும்புகளின் தண்டுப் பகுதியிலுள்ள நடுக்குழிவை நிரப்பி உள்ள பொருள்.

yellow nail syndrome : மஞ்சள் நக இணை நோயியம் : தடித்து மஞ்சள் நடுத்தகடுவுடன் சேர்ந்து, கைகள், காலடிகள், கணுக்கால்கள் முகத்தில் நிணநீர்வீக்கம் நாட்பட்ட நிலையும் சேர்ந்து உள்ள உடல் நோய்த் தொகுதி. அதனோடு சேர்ந்து நுரையீரலுறை நீர்க்கோப்பு, நாட்பட்ட நுரையீரல் தொற்றுகள். மூச்சுப் பிரிகுழாய் வீக்கம்.

yellow ointment : மஞ்சள் களிம்பு : மஞ்சள் மெழுகும், பெட்ரோலிய இழுதும் கொண்ட களிம்பு.

yellow vision : மஞ்சள் பார்வை; மஞ்சள் காட்சி : மஞ்சள் நிறமாகத் தோன்றும் நிலை.

Yersinia : எர்சின்யா : அலெக்ஸாண்டர் பெயர் கொண்ட, என்டிரோ பேக்டீரியாக்கள் குடும்பத்தைச் சேர்ந்த, இயக்கமில்லா, உறைபெறா, நீள்வட்ட அல்லது கோல்வடிவ இருமுனை கிராம் சாயமேற்கா நுண் கிருமியினம்.

Yersin's serum : எர்சின் குருதி நீர் : ஸ்விஸ் நாட்டு நுண்ணுயிரியலாளர் அலெக்ஸான்டர் எர்சின் பெயர் கொண்ட பிளேக் நோய்க்கெதிரான் குருதிநீர்.

Y fracture : ஒய்முறிவு : ஒய் வடிவ கண்டிடை முறிவு.

Y ligament : ஒய் பிணையம் : இடுப்பு மூட்டின் மேல் மற்றும் முன் பகுதியை மூடியுள்ள, ஒய் வடிவப்பட்டையான அமைப்பு.

Y-linked : ஒய்-தொடர்பான : ஒய் குரோமோசம்கள் ஏந்திச் செல்