பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

yoke

1190

Young's syndrome


லும் மரபணுக்கள் அல்லது அவை கடத்தும் நிலைகள் அல்லது குணநலன்களை குறிக்கும்.

yoke : பிணைப்பு : 1. இணைக்கும் அமைப்பு, 2. இரண்டு அமைப்புகளை இணைக்கும் பள்ளம் அல்லது மேடு.

Yokohama asthma : யோக்கஹாமா ஆஸ்த்மா : டோக்கியோவின் துறைமுக நகரமான யோக்கஹாமாவில் நிலவும் மூடுபனியால் தூண்டப்படும் ஆஸ்துமா நிலை.

yolk : மஞ்சள் கரு : முட்டையில் உள்ள மஞ்சள் கரு.

yolk sac (yolk bag) : மஞ்சள் கரு : முட்டை மஞ்சள் கருப் பொதிவு இழைப்பை.

yomesan : யோமெசான் : முதிர்ச்சியடைந்த நாடாப் புழுவை வெளியேற்றும் நிக்லோசாமைடு என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

Young-Helmboltz theory : யங்ஹெல்ம்போல்ட்ஸ் கொள்கை : பார்வை பற்றிய விதி. நிறம் கொண்ட வெளிச்சம், வெவ்வேறு அளவுள்ள சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களுக்கு ஈடான மூன்று வகை கூம்புகளைத் துண்டுகிறது.

Yoon's rings : யூன் வளையங்கள் : வயிற்று உள் நோக்கிக் கருத்தடைமுறையில் கருப்பைக் குழாய்களை அடைக்கும் வளையங்கள்.

Yorkes-Bridges test : பிணைப்புகள்- பாலங்கள் சோதனை : அறிவுக்கூர்மையை சோதிக்கப் பயன்படும் பினெட் சோதனை யில் மாற்றியமைத்து நன்கு அமைத்த வடிவம்.

Young's operation : யங் அறுவைமுறை : பால்டிமோர் சிறுநீர் அறுவை மருத்துவர் ஹியூக்யங் விவரித்த பகுதி புராஸ்டேர் அறுவை நீக்கம்.

Young's rule : யங் விதி :ஆங்கில மருத்துவர் தாமஸ் யங் உருவாக்கிய விதி. ஒரு குழந்தைக்கு தர அறிவுறுத்தப்படும் மருந்தின் அளவை கணக்கிடுவதற்கானது. பெரியவர்களுக்கான மருந்தளவை, வயது ஆண் பெண்ணால் பெருக்கி வரும் குழந்தையின் வயதுடன் பன்னிரெண்டின் எண்ணை கூட்டுத் தொகையால் வகுத்தால் கிடைப்பது.

Young's syndrome : யங் நோயியம் : ஆண்களில் விரிவடைந்த நுண் மூச்சுப் பிரிகுழல்களுடன் சேர்ந்து, சுரப்புகள் கட்டியானதால் விரைமேவியில் அவை பாய்வதற்குத் தடையேற்பட்டதால் குறைந்த எண்ணிக்கை விந்தணுக்கள் உள்ள நிலை. எலும்புக் காற்றில் நுரையீரல்