பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

youth

1191

Yuppie flu


களின் மீள் தொற்றுகள் மற்றும் விந்தணு விலாநிலை தோன்றுகிறது. இழை மயிரியக்கங்கள் இயல்பாக உள்ளன.

youth : இளமை (காலம்) : குழந்தைப் பருவத்துக்கும் முதிர்ச்சியடைந்த ஆள்நிலைக்கும் இடையிலுள்ள காலம்.

Yo-yo effect : யோ-யோ விளைவு : பெருசிறுநீர்க்குழல் அடைப்பினால் அலைவுச் சுருக்கம் பாதிக்கப்பட்டதால், விரிவடைந்த துண்டுப் பகுதியின் அடிப்பகுதியை அடைந்த நிறப் பொருள் பெரும்பகுதி சுழற்சி முறையில் மேல் சிறுநீர்க் குழலுக்குப் பின்னேறுவதோடு ஒரு சிறு பகுதி, சிறுநீர்ப்பைக்குள் செல்கிறது.

Yo-yo liver : யோ-யோ கல்லீரல் : ஒரு வளர்சிதை மாற்ற விளை பொருள் இடையிடையே சேமிக்கப்படுவதால் கல்லீரலின் அளவு திடீரென பெரிதாவதும் சிறிதாவதற்குக் காரணமான கார்னிட்டின் குறைநிலை.

Y-plasty : ஒய் சீரறுவை : தழும்புச் சுருக்கங்களைக் குறைக்க ஒய் வடிவக் கீறலைப் பயன்படுத்துதல்.

Y-protein : ஒய்-புரதம் : கல்லீரல் புரதம் இணைபடாத பிலிரூபினுடன் கல்லீரல் திசுக்களில் கட்டுப்படும் லிகாண்டின்.

Y-set : ஒய்-செட் : இரண்டு தனியான பிளாஸ்டிக் குழல்கள் இரண்டு நீர்மபாட்டில்களைச் சேர்வதோடு, மூன்று அழுக்கிகளும் கொண்ட, ஒரு இணைப்பு சொட்டுக்குழல்களோடு இணைக்கப்பட்டுள்ள, ஒரு முதன்மை சிரையூடு தொடர்பு வழியாக, சிரையூடு நீர்மங்களைச் செலுத்தப் பயன்படும், ஒரு பிளாஸ்டிக் அமைப்பு.

yttrium-90(90 y) : ஒய்ட்ரியம்-90 : கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் "பீட்டாதுகள்கள்" எனப்படும் எதிர்மின்மங்களை உமிழும் பொருள். 64h அளவு அரைவாழ்வுடையது. மார்பகப் புற்றின்போது இது எலும்பு மெழுகில் பொருத்தப்படுகிறது.

Yuppie flu : யுப்பீ ஃப்ளூகாய்ச்சல் : உடலை நலிவடையச் செய்யும் மன அழுத்தம் தொடர்பான வைரஸ் நோய்.