பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Zenker's fluid

1194

zetacrit


பாக டைபாயிடு நோயில் காணப்படும் எலும்புத் தசைகளின் சீர்கேடு.

Zenker's fluid : ஸெங்க்கெர் திரவம் : ஜெர்மன் திகவியலாளர் கோன்ராடு ஸெங்க்கெர் பெயர் கொண்ட, தண்ணிரும் மெர்க்குரிக் குளோரைடு, பொட்டாசியம் டைக்ரோ மேட், கிளேசியல் அசெட்டிக் அமிலகம் கொண்ட ஒரு திசு நிலைப்படுத்தியை உட்கருவை காணப் பயன்படுத்துவது.

zeolite : லியோலைட் : இயற்கையாகக் கிடைக்கும் நாரிய சிலிக் கேட் கணிப்பொருளுக்கு ஆட்படுவதால் நுரையீரலுரை நடு அடுக்குக்கட்டி வளர்ச்சி.

zero : பூஜ்யம் : ஒன்றும் இல்லை சைஃபர் குறியீடு, வரைபடத்தில் நடநிலை உறுதிப் புள்ளி அதிலிருந்து ஒரு அளவு கோலின் எல்லா அளவை பிரிவுகளும் அளக்கப்படுகின்றன. ஒரு அளவுகோலின் இப்புள்ளியிலிருந்து அளவீடு துவங்குகிறது. இந்த எண் உலகுக்களித்த குறிப்பிடத்தகுந்த கொடையாகும்.

zero fluid balance : பூஜ்யம் பாய்ம சமனிடு : உள்ளெடுக்கும் பாய்ம அளவும் வெளியேறும் பாய்ம அளவும் சமமாய் இருக்கும் நிலை.

zero order kinetics : பூஜ்ய அளவுவிசை இயக்கவியல் : மருந்து வெளியேற்றப்படும் அளவு, நேரத்துடன் நேரான அளவிலும், சிதைய மாற்றத்துக்குப் பொறுப்பான நொதியின் செறிவளவைப் பொறுத்து மாறுபட்டும், வினைப்படு பொருள் செறிவுக்கு சம்பந்தமில்லாமலும் உள்ளது.

Zero-End Expiratory Pressure ZEEP : முடிவு பூஜ்ய வெளிமூச்சு அழுத்தம் : மூச்சு வெளியேறும் இறுதியில் காற்று வெளியேறும் அளவுக்கு திரும்பும் அழுத்தம்.

zero population growth : பூஜ்ய மக்கள்தொகை வளர்ச்சி : ஒரு குறிப்பிட்ட கால அளவில் பிறப்புகளின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்போது மக்கள் தொகையளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

zestocautery : கொதிப்புத்தீய்ப்பு : மிகவும் சூடான ஆவியை மருத்துவத்துக்கு பயன்படுத்த உதவும் கருவி.

zetacrit : ஸீட்டாக்ரிட் : ஹெமட்டாக்ரிட்டால் பாதிக்கப்படாத இரத்தச் செவ்வணு படிவு வீதத்தை தீர்மானிக்கும் முறை. ஸீட்டா படிவு வீதம், ஃபைப்ரி னோஜன் மற்றும் காம்மா