பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ziegler's operation

1195

zinc


குளோபுலின் பொறுத்தவரை நேரானது.

Ziegler's operation : ஸீக்ளெர் அறுவைமுறை : அமெரிக்க கண் மருத்துவர் ஸாமுவெல் ஸீக்ளெர் விவரித்த, ஒரு செயற்கை கண்மணியை உருவாக்க வீவடிவத்தில் விழிக் கரும்படலத்தை வெட்டுதல் முறை.

Ziehen's test : ஸீஹென்சோதனை : ஜெர்மன் நரம்பியலாளர் ஜெராக்ஸிஹென் விவரித்த மன நல இயக்க சோதனையில் மாறுபட்ட பொருள்களான பூனை, நாய் இடையே உள்ள வேறுபாட்டை விவரிக்க சொல்லும் சோதனை.

Ziemann's dots : ஸீமான் புள்ளிகள் : பிளாஸ்மோடியம் மலேரியா காய்ச்சலில் சில சமயம் சிவப்பணுப் படலத்தில் காணப்படும் சிறு இளஞ்சிவப்புப்புள்ளிகள்.

Zieve's syndrome : ஸீவ்நோயியம் : மிக அதிகமாக மது அருந்தும் நோயாளிகளில் நாட்பட்ட கல்லீரல் நோய் உண்டாகி, இரத்த அழிவால், வயிற்று வலியும், மஞ்சள் காமாலையும், குருதிக்கொழுப்பு மிகையும் உண்டாகின்றன.

ZIFT : ஸிஃப்ட் : ஒரு பெண்ணின் கருப்பைக் குழாயில் கருவுற்ற முட்டையை செயற்கையாக வைப்பதன் மூலம், மகப்பேற்றின்மையை குணப்படுத்தும் முறை. (கருவுற்ற முட்டையை கருப்பைக்குழலுக்குள் செலுத்தல்).

zig-zag : வளைந்து வளைந்து : முதலில் ஒரு பக்கமும் அடுத்து மறுபக்கமும் கூரான திருப்பங்களை காண்பிக்கும் ஒரு கோடு நீளுதல்.

zileuton : ஸீலில்லியூட்டான் : மிதமான நடுத்தரமான நாட்பட்ட ஆஸ்துமாவில் பயன்படுத்தப்படும் ஒரு 5 லைப்போ ஆக்ஸினேஸ் தடுப்பி.

zinacef : லினாசெஃப் : பெனிசிலினை எதிர்க்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் செஃபுரோக்சிம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

zinamide : ஸினாமைடு : காசநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் பைராசினா மைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

zinc : துத்துநாகம் : பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம். புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாகக் குறைபாட்டினால்,குருதிச் சோகை,