பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zoophilia

1198

zygodactyly


zoophilia : விலங்கு அன்பு : 1. விலங்குகளின் மேல் இயல்பல்லா அன்பு, 2. பாலினக் கிளர்ச்சியை அடைவதற்காக, பாலுறவு அல்லது உடலுறவை விரும்புதல்.

zoospore : விலங்குக் கருமூலம் : சில ஓரணுவுயிர்கள், பூஞ்சைகள், பாசிகள் உருவாக்கும் நகரும் கருவணு.

zootoxin : விலங்குநச்சு :தேள்கள், சிலந்திகள், பாம்புகளின் விஷம் போன்ற விலங்குகளி லிருந்து உருவாகும் நச்சுப் பொருள் அல்லது அது மாதிரி நச்சிலிருந்து தயாரிக்கப்படும் ஊநீர்.

z-plasty : இஸ்ட் ஒட்டறுவை : தழும்புச் சுருக்கங்களை இளக் குவதற்கு செய்யப்படும் வடிவ மைப்பு (சீர்) அறுவை இஸட் வடிவில் கீறி, இரு முக்கோண மடிப்புகளை அவற்றின் முனைகள் சுருக்கக்கோட்டை தாண்டுவது போல் இடம் பெயர்தல்.

zoster : தேமல் : படர் தாமரை, அக்கி.

z protein : இஸ்ட் புரதம் : வரித் தசையின் இஸ்ட்பட்டையில் இயல்பாக உள்ள ஒரு புரதம்.

z score : இஸ்ட்கணிப்பெண் : கணிப்பெண்ணுக்கும் சராசரிக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு நிலையான விலகலால் வகுப்பதைக் குறிக்கும் மதிப்பெண் விலகல்.

z-track : இஸ்ட் தடம் : உள் செலுத்தப்பட்ட கரைசல் பின் வராமல் தடுக்கின்ற முறையில் உட்செலுத்தும் முறை.

Zuckerkandl's bodies : ஸீக்கெர் கேன்டில் மெய்மங்கள் : ஜெர்மன் உடற்கூறியலாளர் எமில்க்கர் கேன்டில் விவரித்த, மகாதமனி இரண்டாகப் பிரியுமிடத்திற்கு அருகிலுள்ள பக்க நரம்பு முடிச்சு நரம்பணுத் திரள்கள்.

Zulu dancer's hip : ஸூலு நடனமாடுவோர் இடை : ஸூலு மக்களில் உண்டாகும் தொழில் மய மூட்டழற்சி.

zvalue : இஸட்-மதிப்பு : ஒரு மக்கட் குழுவின் சராசரி குறிப்பிட்ட பெண்ணிடமிருந்து மாறுதல் இல்லை என்னும் புனைவு கோளுக்கான புள்ளி விவரச் சோதனை.

z wave : இஸட்-அலை : இதய மேலறை மற்றும் கீழறைச் சுருக்கங்களுக்கிடை நேரத்தில் மேலறை அழுத்தம் குறைதல்.

zwitterion : ஈரயனி : நேர்மின்னேற்றமும் எதிர்மின்னேற்றமும் கொண்ட அயனி.

zygodactyly : விரலுள்ள : ஒட்டி இணைந்த விரல்களைப் போலி அல்லாமல் விரலெலும்புகளின் எலும்பினைப் பிணைப்பின்றி,