பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anorexia (anorexia ner...

121

antagonism


இல்லாதிருத்தல் நோய். (2) பசி யின்மை நோயால் அவதியுருவர்.

anorexia (anorexia nervosa) : பசியின்மை நோய்; பசியாமை நோய் : பெரும்பாலும் குமரப் பருவப் பெண்களைப் பீடிக்கும் ஒரு சிக்கலான உளவியல் நோய். உடல் பருத்துவிடுமோ என்ற அச்சத்தில் இளம் பெண்கள் மிகக் குறைவாக உணவு உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்போது இந்தப் பழக்கம் ஒர் உளவியல் நோயாக மாறி உணவு உண்பதில் வெறுப்பை உண்டாக்கிவிடுகிறது. இதனை 'ஒல்லியாவதற்கு அடிமையாதல்” என்றும் கூறலாம். இந்நோய் கண்டவர்களுக்கு எடை குறைகிறது; உடல் எடை குறைந்தாலும் உடல் குண்டாகிறது என்னும் அச்சவுணர்வு தீவிரமடைகிறது. உடல் மெலிதல், இயல்புக்குமீறி மாதவிடாய் வராதுபோதல், மலச்சிக்கல், கால் வீக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. அத்துடன் மிகக் குறுகிய காலத்தில் பெருந்தீனி உண்ணும் பெரும் வேட்கையும் உண்டாகிறது. உணவு உட் கொள்வது குறைந்துகொண்டே வருவதால் இறுதியில் மரணம் விளைகிறது.

anosmia : முகர்வுணர்விழப்பு; முகர்வுணர்வின்மை; மோப்ப உணர்வின்மை; முகரின்மை : முகரும் உணர்வை இழந்து விடுதல்.

anovular : கருவளர்ச்சியின்மை; முட்டையின்மை; சூழற்ற : கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் பெண்களிடம் கருவுறுதலின்றி மாதவிடாய் உண்டாகிறது. இதனால் இரத்தப் போக்கு அதிகமாகும்.

anoxaemia : குருதி ஆக்சிஜன் குறைபாடு; உயிர்வளிக்குறை குருதி : இரத்தத்தில் ஆக்சிஜன் இல்லாதிருத்தல்.

anoxia : திசு ஆக்சிஜன் குறை பாடு; உயிரியமின்மை; உயிரிய முடக்கம் : இரத்தத்தில் அல்லது திசுக்களில் ஆக்சிஜன் போதிய அளவு இல்லாது இருத்தல்.

ansiline : அன்சிலின் : நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்ப் பசையுள்ள ஒரு கூட்டுப் பொருள். இது நோய் நுண்மத்தடைச்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது.

antacid : புளிப்பு நீக்க மருந்து; அமில எதிர்ப்பி; அமில முறி : வயிற்றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத்தன்மையுடைய வயிற்றுவலி நீக்கத் தூள் கலவை மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.

antagonism : எதிர்ப்புத் தன்மை; எதிர்ப்பியல் : சில மருந்துகளில் உள்ள தீவிரமான எதிர்ப்புத் தன்மை, (எ-டு) "நாக்சோலோன்"