பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antiadrenergic

124

antibiotics


காகவும், பாலினம், வயது, எடை, இனம் போன்றவற்றுக்கான உரு மாதிரிகளை வகுப்பதற்காகவும் இந்த அளவை பயன்படுகிறது.

antiadrenergic : நரம்புத்தூண்டல் சமனமாக்கல் : பரிவு நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகளினால் உண்டாகும் தூண்டு விளைவுகளைச் சமனப்படுத்துதல் அல்லது குறைத்தல்.

antiallergic : ஒவ்வாமைத்தடுப்பு; மாற்று வினைப்பகை : ஒவ்வா மையைத் தடுத்தல்; குறைத்தல்.

antiamoebic : அமீபாக்கொல்லி : அமீபா கிருமிகள் வளர்வதையும், பெருகுவதையும் தடுக்கின்ற அல்லது அவற்றை அழிக்கின்ற மருந்து. -

antianabolic : புரதச்சேர்மம் தடுப்பு : உடல் புரதத்தின் கூட் டிணைவைத் தடுத்தல்.

antianaemic : குருதிப் போக்கு தடுப்பு மருந்து; சோகை எதிர்ப்பி : குருதிக்குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்கப் பயன்படும் மருந்து. (எ-டு) வைட்டமின் K.

antianginal : இதயவலி மருந்து; நெஞ்சுவலி மருந்து : இதயத் தசைகளுக்குச் செல்கின்ற இரத்த அளவை அதிகரித்தும், இதயப்பணி அளவைக் குறைத்தும் இதய வலியைப் போக்குகின்ற மருந்து.

antiarrhythmic : இதய சீர் மாறிய துடிப்பு மருத்துவம் : பல்வேறு இதயத்துடிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும், மருத்துவ முறைகளும்.

antibacterial : பாக்டீரியா எதிர்ப்பு மருந்து; நுண்ணுயிரி முறி; நோயணு முறி : பாக்டீரியாக்களை அழிக்கிற, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற ஒரு மருந்து.

anti beriberi : தவிட்டான் எதிர்ப்பு மருந்து : ஊட்டச்சத்துக் குறை வினால் உண்டாகும் தவிட்டான் என்ற நோய்க்கு எதிரான மருந்து. எடுத்துக்காட்டு : வைட்டமின் B கலைைவயிலுள்ள தையாமின்.

antibiosis : உடன்வாழ் ஒவ்வாமை எதிர் உயிரிகள்; உயிர்ப் பகைமை: ஒர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள், மற்றோர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாக இருக்கும் தன்மை.

antibiotic : நோய்முறியம்.

antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள்; உயிர்க் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி; நோய்முறியம் : பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோய்க் கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பென்சிலின் இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராசைக்ளின் போன்ற