பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antibody

125

antidiarrhoeal


தசைநோய் உண்டாக்கும் உயிரிகளுக்கு எதிராகத் திறம்பட வேலை செய்கின்றன; இவற்றை வாய்வழியாகவும் கொடுக்கலாம். நியோமைசின், பாசிட்ராசின் போன்றவை அதிக நச்சுத் தன்மையுடையனவாக இருப்பதால், உள்ளே பயன்படுத்தப்படுவதில்லை, புறகாயங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.

antibody : நோய் எதிர்ப்பொருள்; விளை எதிர்மம்; தற்காப்பு மூலம் : தீங்குதரும் அயற்பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.

anticholinergic : பித்தநீர் நரம்புக் கோளாறு : பித்தநீர் நரம்பு, அசிட்டில்கோலின் என்ற ஒரு வேதியியல் பொருளின் மூலமாகத் தனது துண்டல்களை நரம்பு அல்லது இதய நரம்புச் சந்திப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த நடவடிக்கைக்குத் தடையாக இருக்கும் செயல்.

anticlockwise : எதிவலம்.

anticoagulant : குருதிக்கட்டுத் தடைப்பொருள்; உறைவு எதிர்ப்பி : உடலில் காயம்பட்டு இரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி வீணாவதைத் தடுப்பதற்காக, இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் இரத்தத்தில் உள்ளது. இவ்வாறு இரத்தம் உறையச் செய்வதைத் தடுக்கும் பொருள் குருதிக்கட்டுத் தடைப்பொருள் ஆகும். நோயியல் பரிசோதனை களுக்காக இரத்தம் முழுவதையும் எடுக்க வேண்டியிருக்கும்போது, ஆக்சாலிக் அமிலம் (வெல்லக அமிலம்) குருதிக்கட்டுத் தடைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இரத்தம் செலுத்துவதற்காக இரத்தம் எடுக்கும்போது, சோடியம் சைட்ரேட் குருதிக் கட்டுத் தடைப்பொருளாகப் பயன்படுகிறது.

anticoagulation : இரத்தம் உறைதலைத் தடுத்தல்; இரத்தம் உறையாத் தன்மை; குருதி உறையா நிலை.

anticonvulsant : வலிப்புத் தடைப் பொருள்; வலிப்படக்கி; வலிப்பு முறி : வலிப்பை அறவே ஒழிக்கிற அல்லது தடுக்கிற பொருள்.

antidepressants : சோர்வு நீக்க மருந்துகள்; உளச்சோர்வுப் போக்கிகள் : சோர்வினை அகற்றுகிற மருந்துகள் டிரைசைக்ளிக் குழுமத்தைச் சேர்ந்த மருந்துகள் இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அகச்சோர்வுக் கோளாறுகளுக்கு இவை பயன்படுகின்றன.

antidiarrhoeal : வயிற்றுப்போக்குத் தடுப்பு மருந்து : வயிற்றுப்போக்கைக் குறைக்கின்ற மருந்து வயிற்றுப் போக்கை குணப்படுத்துகின்ற