பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antirheumatic

130

antispasmo,


ஊக்குங்கூறு செலுத்தப்படும் போது எதிர்ச்செயல் காட்டுகிற (Rh-positive) குழந்தை பெறுகிற பெண்களுக்குப் பிந்திய மகப்பேற்றின் போது கருமூலத்தாள் சவ்வில் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, குருதியில் உறைமம் ஊக்குங்கறு செத்தப்படும் போது எதிர்ச்செயல்காட்டாக (Rh-negative) கூறு அளிக்கப்படுதல்.

antirheumatic: கீல்வாதத் தடுப்பு மருந்து; மூட்டுவலித் தடை; வாதமடக்கி; முடக்கு நோய் தடுப்பி; முடக்கு நோய் நீக்கி : கீல்வாதத்தைத் தடுக்கக்கூடிய அல்லது குறைக்கக் கூடிய மருந்து.

antiscorbutic : சொறிநோய்த் தடுப்பு மருந்து; மூக்கு வறட்சி நோய் நீக்கி; கசிநோய்த் தடை : ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படும் சொறி, கரப்பான், பல் எகிர் வீக்க நோயைத் (ஸ்கர்வி) தடுக்கிற அல்லது குணப் படுத்துகிற மருந்து. வைட்டமின் C இந்தப் பணியைச் செய்கிறது.

antisecretory : சுரப்புத் தடுப்பு மருந்து; சுரப்புத் தடை; சுரப்புக் குறைப்பி

ஊனிர்கரப்பதைத் தடுக்கும் மருந்து.

antisepsis : நுண்மத்தடை; சீழ்த் தடை; சீழ்த் தடுப்பி : நோய் நுண் மங்கள் வளர்ச்சியடைந்து திசுக்களை அழித்துவிடாமல் தடுத்தல். லிஸ்டர் பிரபு 1880 இல் அறுவை மருத்துவத்தில் கார்பாலிக் அமிலத்தை முதன்முதலாக இதற்குப் பயன்படுத்தினார்.

antiseptic : நோய் நுண்மத் தடை மருந்துகள்; சீழ் எதிர்ப்பி; நச்சு நீக்கி; நச்சு நீக்குவி : நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற வேதியியல் பொருள்கள். இவை உயிருள்ள திசுக்களில் பயன்படுத்தப்படுகிறது.

antiserum : நோய் எதிர்ப்பு ஊனீர்; எதிர்ச்சீரம் : ஒரு விலங்கின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது தேவையான காப்பு மூலத்தின் மூலம் நோய்த்தடைகாப்பு செய்யப்பட்டிருக்கும். இதில் பெரு மளவில் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியிருக்கும்.

antisialagogue : உமிழ்நீர் தடுப்புப் பொருள்; எச்சில் சுரப்பு ஒடுக்கி : வாயில் அளவுக்கு மிஞ்சி எச்சில் ஊறுவதைத் தடுக்கும் பொருள்.

antisocial : மனநலக்கேடு : சமுதாயத்தை வெறுக்கிற மனநிலை, ஒரு சமுதாயத்தின் அதன் உறுப்பினர்கள் விதிக்கும் கடமைப் பொறுப்பு களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை.

antispasmodic : தசைச் சுரிப்புத் தடுப்பு முறை; நடுக்கமகற்றி; இறுகு தடை; இசிவகற்றி : தசையில் சுரிப்புக் கோளாறுகளினால்