பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antisterility

131

antivenin


ஏற்படும் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை.

antisterility : மலடு நீக்க மருந்து; மலடு நீக்கி; மலடு முறி : இனப் பெருக்கத் தகுதியின்மையை நீக்குவதற்கான மருந்து வைட்டமின் E இப்பணியைச் செய்கிறது.

antisyphilitic : மேகப்புண் தடுப்பு முறை; மேகப் புண் ஒழிப்பு; மேகப் புண் தடை : மேகப்புண் (கிரந்தி) என்ற மேக நோயைத் தடுப்பதற்கான மருத்துவமுறை.

antithrombin : திராம்பின் தடை; குருதியுறைவுத் தடுப்புப்பொருள் : இரத்தத்தில் இயற்கையாக இருக்கும் குருதியுறைவுத் தடுப்புப் பொருள். (எ-டு) ஹெப்பாரின்.

antithrombotic : குருதிக் கட்டுத் தடுப்பு மருத்துவமுறை; படிம உறை வெதிர்ப்பு : குருதி நாளங்களில் குருதிக்கட்டு ஏற்படாமல் தடுப்பதற்கான அல்லது அதனைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை.

antithymocyteglobulin (ATG) : கணையச் சுரப்பி நோய்த் தடுப்புத் தசைப் புரதம் : கழுத்துக் கணையச் சுரப்பி நீரை காப்பு மூலங்களுடன் பிணைக்கும் நோய்த் துடுப்புத் தசைப்புரதம்.

antithyroid : கேடயச் சுரப்பிக் குறைப்பு மருந்து; தைராய்டு எதிர்ப்பி : கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பியான கேடயச்சுரப்பியின் (தைராய்டு) நடவடிக்கையைக் குறைக்கப் பயன்படும் ஒரு மருந்து.

antitoxin : எதிர் நச்சு; நச்சு முறியம் : உடலில் பாக்டீரியாவினால் உண்டாகும். நச்சுப் பொருளுடன் கலந்து அதனைத் தீங்கற்ற தாக்குவதற்கு உடல் உற்பத்தி செய்யும் பொருள்.

antitoxic : எதிர்நச்சுத்தன்மை கொண்ட.

antitragus : செவிக்கரடு : புறச்செவியின் நுழைவாய் எதிர்ப் புடைப்பு.

antituberculosis : காசநோய் மருத்துவ முறை : காசநோய் எனப்படும் எலும்புருக்கி நோயைத்தடுப்பதற்கான அல்லது குணப் படுத்துவதற்கான சிகிச்சை முறை.

antitumour : கழலை எதிர்ப்பு மருந்து: கழலை அல்லது கட்டி வளர்வதைத் தடுப்பதற்கான மருந்து.

antitussive : இருமல் சிகிச்சை முறை; இருமல் அடக்கி; இருமல் தடை : இருமலை நீக்குவதற்கான மருத்துவ முறை.

antivaccinationism : அம்மைகுத்தெதிர்ப்பு.

antivenin : நச்சு மாற்று மருந்து; நச்செதிர்ப்பி : பாம்புக் கடித்த நஞ்சுக்கு முறிவாகக் கொடுக்கப்படும் மருந்து.