பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antivenom

132

anxiety


antivenom : விடமுறி; நச்சுமுறி.

antiviral: நோய்க்கிருமி எதிர்ப்பி; அதி நுண்ணுயிர் எதிர்ப்பி : நோய்க் கிருமிகளை எதிர்த்துச் செயற்படுதல்.

antivitamin : எதிர் ஊட்டம்; ஊட்ட சாரா எதிர்ப்பி; உயிர்ச் சத்து எதிர்ப்பி; உயிர்ச் சத்துத் தடை : 'வைட்டமின்' என்ற ஊட்டச்சத்தின் செயலைத்தடுக்கும் ஊட்டப் போலி. (எ-டு) அவிடின்.

anti-vivisection : உயிரோடறுவை எதிர்ப்பு : உயிருடன் விலங்கு, சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.

antrectomy : இரைப்பை நீர்சுரப்புத்தடை அறுவை மருத்துவம்; இரை முழை எடுப்பு : சிறுகுடல் அழற்சியைக் குணப்படுத்து வதற்காக, வயிற்றிலுள்ள இரைப்பைச் சிறுகுடல் முதற்கூற்று இடை வழி வாய்ப்பகுதி உள்வளைவினை வெட்டியெடுத்துவிட்டு, இரைப்பை நீர்சுரப்பு ஆதாரத்தை அகற்றுதல்.

antrostomy : மேல் தாடைக் குழிவு அறுவை மருத்துவம்; முழைவாய் அமைப்பு : தாடை எலும்பு உட்புழையின் உட் குழிவிலிருந்து மேல்தாடை உள்வளைவு வரையில் வடிமான நோக்கத்திற்காக செயற்கை முறையில் (அறுவை செய்து) திறந்து சிகிச்சை செய்தல்.

antrum : தாடைக் குழிவு; குகைக் குழிவு; எலும்புக் குழிவெட்டு; எலும்பறை வெட்டுக்குழி புழை : மேல் தாடை உள்வளைவு. இது பற்களுக்கு மேலே, நெற்றிக்குள்ளே, கண்களுக்குச் சற்று மேலே காதின் பின்புறமுள்ள எலும்பில் அமைந்திருக்கும்.

தாடைக் குழிவு

anturan : அன்டுவாரன் : சல்ஃபின் பைராசோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

anuria : சிறுநீர்த்தடை; சிறுநீரற்ற; சிறு நீர்க்கட்டு; சிறுநீர்ப் பொய்ப்பு; சிறுநீர் அறவு : சிறு நீரகங்கள் சிறுநீரை சுரக்காமலிருத்தல்.

anus : குதவாய்; மலவாய்; கழிவாய் : மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது.

anus, imperforate : மலவாய் அடைப்பு.

anxiet neurosis : பதை பாதிப்பு.

anxiety : கவலை; ஏக்கம்; கலக்கம்; பதட்டம் : அச்சவுணர்வு காரணமாக உண்டாகும் கவலை. இது நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகிறது. கடுமையான