பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

apexcardiogram

134

aphonic aphonous


நுரையீரல் பகுதி இதய உச்சி; இதயத்தின் கீழ்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதி, இது இடது கீழறையால் உருவானது.

apexcardiogram : இதயௌச்சி வரைபடம் : இதயஉச்சி வரைவி மூலம் மார்பு அசைவுகளைப் பரிசோதித்தல்.

apexcardiography : இதயௌச்சி வரைவி: மார்புக்கூடு அசைவுகளால் இதயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உண்டாகும் குறை அலை அதிர்வுத் துடிப்புகளை பதிவு செய்யும் கருவி. -

apgarscore : அப்கார் கணிப்பு : பிறந்த குழந்தையின் பொதுவான நிலைமையைக் கணித்தறிவதற்கு அமெரிக்க மருத்துவ அறிஞர் டாக்டர் விர்ஜினியா அப்கார் வகுத்த ஒரு முறை. இதன்படி, முக்கு வழியாக ஒரு சிறு குழலைச் செலுத்தி இதயத்துடிப்பு விகிதம், சுவாச முயற்சி, தோல் நிறம், தசையின் இயல்பு, அனிச்சை செயல் ஆகியவற்றின் அடிப்படையில் 0,1,2 என்ற கணிப்பு எண்கள் கொடுக்கப்படுகின்றன . 8-10 வரை கணிப்பு எண் இருக்குமாயின், குழந்தை மிகச்சிறந்த நிலையில் இருக்கிறது என்று கருதப்படுகிறது. கணிப்பு எண் 7-க்குக் குறைவாக இருக்குமாயின் குழந்தையின் நிலை கவலைக்குரியது என்று கருதப்படுகிறது.

aphagia : தொண்டையடைப்பு; விழுங்கின்மை : விழுங்குவதற்கு இயலாதிருத்தல்.

aphakia : புரையிலாக் கண்; விழி வில்லையின்மை; ஒளியமின்மை: கண்ணில் ஒளி எளிதில் ஊடுருவும் முகப்புக் குமிழ் இல்லாதிருத்தல். கண்புரையை அகற்றிய பின்பு உள்ள கண்ணின் நிலை.

aphasia : பேச்சின்மை : மூளைக்கோளாறினால் உண்டாகும் பேச்சிழப்பு. இதில் முக்கியமாக உந்து பேச்சின்மை, உணர்வுப் பேச்சின்மை என்று இருவகை உண்டு. பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த இரு வகைக்கோளாறுகளும் அமைந்திருக்கும்.

aphasic : பேச்சின்மை நோய் மருந்து; பேச்சற்றவர் : பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து.

apheresis : இரத்தம் இறக்கல்; இரத்தம் பிரித்தல் : நோயாளியின் இரத்தத்திலிருந்து தேவையற்ற இரத்தப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் முறை.

aphonia : குரலின்மை; பேச்சொலி யின்மை : நரம்புக் கோளாறினால் பேச்சாற்றலை இழத்தல்.

aphonic aphonous : வாய் பேசாத.