பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aphrasia

135

apicitis


aphrasia : பேசஇயலாமை : பேச்சின்மை.

aphrodisiac : இணை விழைச்சுத்தூண்டு மருந்து; பாலுணர்வு ஊக்கி; பாலுணர்வூட்டி; பாலுணர்வு ஊக்கி; பாலுணர்வூட்டி; காமமூட்டி; காமக் கிளரி : சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டுகிற பொருள் அல்லது மருந்து. பாலுணர்வு வேட்கைகளை தூண்டுகிற பொருள்; பாலுறவு கொள்ளும் நேரத்தை நீட்டிக்க உதவும் மருந்து.

aphtha : கொப்புளம் : வாயின் உட்பகுதியை முடியிருக்கும் சளிச் சவ்வு வழியாக, சில நஞ்சுடைய அல்லது எரிச்சலூட்டும் பொருளிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருளினால் வாயில் உண்டாகும் கொப்புளம்.

aphthae : கொப்புளங்கள்; வாய்க் கொப்புளம் : தோலி பட்டை பட்டையாகத் துடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள்.

aphthosis : வாய்ப்புண் : வாயில் புண் ஏற்படுத்தும் நோய் எது வானாலும்.

aphthous stomatitis : வாய்ச் சிறுபுண் : வாயின் உட்புறத்தில் உண்டாகின்ற வலியுடன் கூடிய சிறுபுண்கள்.

apthovirus : ஆப்தோவைரஸ் : பிக்கோர்னா விரிடியே எனும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை வைரஸ். இது காலிலும் வாயிலும் நோய்களை ஏற்படுத்தும்.

aphylaxis : நோய்க்காப்பின்மை; நோய்த்தடுப்பின்மை : நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வழி இல்லாத நிலை.

API : இந்திய மருத்துவக் கழகம்.

apical : உச்சியில்; உச்சியான : ஒரு பொருளின் உச்சி : உடல் உறுப்பு உச்சிப்பகுதி : உச்சித் துடிப்பு : இதயத்தின் கீழ் முனையில் வெளிப்பக்கமாகத் தோன்றும் இதயத் துடிப்பு. இதை வெளியிலிருந்து காணலாம்; உள்ளங்கையை வைத்து உணரலாம். நடு நெஞ்செறிப் பிலிருந்து 4 செ.மீ. தூரத்திலும் இது இடைக் காரை எலும்பிலிருந்து வரையப்பட்ட நேர்க்கோட்டிலிருந்து 1.5 செ.மீ. வலது பக்கமாகவும் இடது பக்க மார்பில் ஐந்தாவது விலா இடைவெளியில் உள்ளங்கையை வைத்து இத்துடிப்பை நன்கு உணரலாம்.

apicoectomy : பல் நுனித் துண்டிப்பு : பல் வேரின் மேல் நுனியைத் துண்டித்து எடுத்தல்.

apicitis : உச்சியழற்சி; நுனியழற்சி; உறுப்புகளின் உச்சியழற்சி; முனை யழற்சி : நுரையீரலின் உச்சிப்பகுதி அல்லது பல்லின் வேர்ப் பகுதி அழற்சியுறல்.