பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

apicoectomy

136

apolipoproteins


apicoectomy : உச்சி அகற்றல்; உச்சி நீக்கல்; உச்சி வெட்டல் : பல்லின் உச்சிப்பகுதியை வெட்டி எடுத்தல்.

apicolysis : உச்சிமுடக்கம்; உச்சிச் சுருக்கம் : நுரையீரலின் உச்சிப்பகுதி துவண்டு விடுதல், செயல் முடங்கி விடுதல்.

aplacental : கொப்பூழ்க் கொடியற்ற.

aplasia : திசுவளர்ச்சிக் குறைபாடு; வளர்ச்சிக்குறை; வளர்வின்மை : திசுக்கள் முழுமையாக வளராதிருத்தல் அல்லது அறவே வளராதிருத்தல்,

aplastic : புதுத்தசை வளர்ச்சியின்மை; வளர்வில்லாத : புதிதாகத் திசு வளர்ச்சி ஏற்பட இயலாதிருத்தல்; கட்டமைப்பு அல்லது வடிவம் இல்லாதிருத்தல்.

apneusis : மூச்சிழுப்புத் திணறல் : உள்மூச்சு வாங்குதலில் சிரமம் தோன்றுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுதல்.

apnoea : மூச்சு நிற்றல்; மூச்சின்மை : மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போதல், தேவையான கார்பன்டை-ஆக்சைடு இல்லாதிருத்தல், சுவாச மையத்தில் துாண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும்.

apo : அப்போ : 'வெவ்வேறாகப் பிரிந்திருக்கின்ற' எனும் பொருள் தரும் ஒர் இணைப்புச் சொல். (எ.கா.) சூல் இணையாத சூலகம் வேறாக உடைய.

apocrine : பிறச்சுரப்பிகள் : சுருண்டு உருண்டு திரண்டிருக்கும் உடல் புறச்சுரப்பிகள் (எ.கா.) வியர்வைச் சுரப்பிகள்.

apocrine glands : வியர்வைச் சுரப்பிகள்; புறச்சுரப்பிகள் : அக்குள். பிறப்பு உறுப்புகள், விரைப்பைக்கும் கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதி ஆகியவற்றில் இவை உள்ளன. பூப்பெய்திய பின்னர் உடலில் ஏற்படும் வாடைக்கு இவையே காரணம்.

apod : கால் இல்லா உயிரினம் : கால் அல்லது வயிற்றடிச் செதிள்கள் இல்லாத உயிரினம்.

apodia : காலின்மை; அடிக்காலின்மை; பாதமின்மை : பிறவியிலேயே கால்கள் இல்லாதிருத்தல்.

apoenzyme : அப்போநொதிப்பி: ஒரு நொதியின் புரதக்கூறு.

apoferritin : அப்போபெரிட்டின் : சிறுகுடல் சுவர்த்தசைகள் காணப்படும் புரதப்பொருள். இது இரும்புத் தாதுச் சத்துடன் இணைந்து பெரிட்டின் எனும் சத்துப்பொருளாக மாறும்.

apolar : முனையற்ற; துருவமற்ற : முனைகள் இல்லாத நிலை.

apolipoproteins : அப்போலிப்போபுரோட்டின்; அப்போ கொழுப்புப் புரதம் : கொழுப்புப் புரதங்களுள் காணப்படும் புரத