பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

apothecary

138

appetite


apothecary : மருந்து விற்பவர்; மருந்து கலப்போர்; மருந்து கலவை செய்வோர்.

apparatus : ஆய்வுக் கருவி; ஆய்கருவி; ஆய்கலம்; செய்கருவி; கருவிகலம் : பல சிறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி கலம்.

appearance : தோற்றம்.

appendage : துணையுறுப்பு; தொடர்பிணைவு : முதன்மையாக உள்உடலுறுப்பின் பணிகளுக்கு உதவுவதற்காக உள்ள ஒரு துணையுறுப்பு. -

appendectomy : குடல்முளை அறுவை மருத்துவம் : குடல் வாலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

appendecitis : குடல்வால் அழற்சி; குடல்முளை அழற்சி :குடல் முளை வீக்கம் அல்லது அழற்சி.

appendicostomy : குடல்வால் துளை வெட்டல் : குடல்வாலில் துளையிட்டு சிறுகுடல் அறுவை மருத்துவம் மேற்கொள்ளுதல்.

appendicular mass : குடல்வால் கட்டி : வலது இடுப்பெலும்புக் குழிவில் தோன்றும் வீக்கம். இது குடல்வால் அழற்சியுற்று வீங்கிக் கொள்வதால் உண்டாகின்றது. குடல்வாலில் சீழ்சேர்ந்து காய்ச்சலும், வயிற்று வலியும், வாந்தியும் ஏற்படும். அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தால் குடல்வால் உருண்டு திரண்டு கடினமாகி இருப்பது உணரப்படும்.

appendix : குடல்வால்; குடல் முளை : குடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றும் சிறுமுளை. இது 'குடல்முளை' என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும், 50.8 முதல் 152.4மி.மீ வரை நீளமுடையதாகவும் இருக்கும்.

குடல் வால்

apperception : புலன் உணர்வு : பொறியுணர்வை வாங்கிப் புலனுணர்வாக்கும் இயல்பு.

appestat : பசிமையம்; மூளைப் பசிமையம் : பசியைத் தூண்டு வதற்கும் அடக்குவதற்கும் உதவுகின்ற மூளை மையம்.

appetite : பசியார்வம்; நுகர்ச்சி வேட்கை : உணவுத் தேவையைத்