பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

appetizer

139

aptitude


தீர்த்துக் கொள்ளும் இயற்கை விருப்பம்.

appetizer : பசியார்வமூட்டி பசியூக்கி.

applenometer : விழி அழுத்த அளவி : உள் அழுத்தத்தை அளக்க உதவும் அழுத்தமானி.

apple : ஆப்பிள் பழம்.

appliance : துணைக்கருவி பயன்படு சாதனம் : செயற்கைக் கால் பயன்பாட்டிற்கு உதவும் ஒரு துணைக் கருவி. செயற்கைப் பற்கள் தயாரிக்க உதவும் துணைக் கருவி.

apply : பயன்படுத்து; அருகே வை; பொருத்து நன்கு கவனி; வேண்டுகோள் விடு.

apposition : வலுவூட்டல்; வலு ஏற்றல்; அருகமைவு : ஒரே தொடர்பு இருக்குமாறு வைத்தல்; நேரியைவு; உடைந்த எலும்புகளை ஒன்று போலிருக்குமாறு சரிபடுத்துதல். தனித்தனிப் பொருள்களை அருகருகே அமையு மாறு வரிசைப்படுத்துதல்.

apprehension : அச்சம்;அச்ச உணர்வு; உணர்வு மிகைப்பு; எதிர்பார்ப்பு அச்ச உணர்வு.

approved name : அங்கோரம் பெற்ற பெயர்; ஒப்புக் கொள்ளப்பட்ட பெயர் : மருந்தியல் முறை நூலில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட மருந்துப் பெயர்கள்.

approximation : தோராயம்.

APPT : ஆக்டிவேட்டட் பார்சியல் திரோம்போபிளாஸ்டின்.

apraxia : கைமுடக்கம்; செயல்திறன் குறை : மூளைக்கோளாறு காரணமாகப் பொருள்களைத் திறம்படக் கையாள்வதற்கு இயலாதிருத்தல்.

apron : மேலங்கி; மேலாடை; மேலுடை : அறுவை மருத்துவம், நோய்த் தணிப்பு ஆய்வு, மருத்துவச் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளும்போது மருத்துவரும் மருத்துவ உதவியாளர்களும் அணிந்துகொள்ளும் மேலாடை, இது உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன் புறத்தில் அணியப்படும் முரண்டுத் துணி அல்லது தோல்.

ஈய மேலாடை : ஊடுகதிர்ப் படம் எடுப்பவர் கதிரியக்கக் கதிர்கள் தன்னுடைய உடலில் புகுவதைத் தடுக்க ஈயத் தகடுகள் கொண்ட தோலாடையை உடலின் மேல் போர்த்திக் கொள்வார்.

aprosexia : எண்ணங்களை ஒரு முகப்படுத்த இயலாமை.

aptin : ஆப்டின் : ஆல்பிரினால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

aptitude : நாட்டம் : பணிகளைச் செய்வதில் இயல்பான உளவியல் அல்லது உடலியல் நாட்டம் மற்றும் திறம்பாடு.