பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aptyalism

140

arachnoid


aptyalism : உமிழ்நீர்நொதிச் சுரப்புக் குறைவு; உமிழ்நீர்ச்சுரப்புக் குறைவு; உமிழ்நீர்ச்சுரப்பின்மை : உமிழ்நீர்ச்சுரப்பும் அதிலுள்ள 'டயலின்' நொதியும் குறைவாக சுரப்பது அல்லது அறவே சுரக்காத நிலைமை.

apyogenic : சீழற்ற; சீழின்மை : சீழ் இல்லாத, சீழ் காரணமற்ற, சீழால் உண்டாகாத.

apyretic : காய்ச்சலின்மை; உடல் வெப்ப மிகைப்பு இன்மை : காய்ச்சல் அற்ற.

apyrexia : காய்ச்சல் இன்மை : காய்ச்சல் நின்றிருத்தல்.

apyrogen : வாலை வடிநீர் : நோய் நுண்மங்கள் நீக்கப்பட்ட வாலை வடித்த நீர். இது கண்ணாடிக் குமிழ்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதில் காய்ச்சல் உண்டு பண்ணுகிற நோய் நுண்மங்கள் இரா. ஊசி மூலம் செலுத்தக்கூடிய தூள் வடிவிலுள்ள மருந்துகள் தயாரிக்க இது பயன்படுகிறது.

aqua : நீர் : நீரியல் பொருள்; நீர்மம், கரைசல்.

aquaphobia : நீர் பயம்; தண்ணீர் பயம் : தண்ணிரைக் கண்டாலே பயம். வெறிநாய்க்கடி நோயுள்ளவருக்கு இம்மாதிரியான பயம் ஏற்படும்.

aquatic : நீர்சார்ந்த.

aqueduct : சிறுகுழாய் நீர்நாளம் : பாலுண்ணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறு குழாய்.

aqueous humour : முங்கண்நீர்; விழி முன்னறை நீர்மம்; ஒளிய நீர் : விழிமுன் தோலுக்கும் விழிச்சில்லுக்கும் இடையிலுள்ள நீர்.

aqueous : நீர்ம.

aquosity : நீர்த்தன்மை.

arachidic : அராக்கிடிக் அமிலம்.

arachidonic : அராக்கிடோனிக் அமிலம்.

arachidonic acid : அராக்கிடோனிக் அமிலம் : இன்றியமையாத கொழுப்பு அமிலங்களில் ஒன்று. மனிதர், விலங்கு நுரையீரல் மற்றும் உறுப்புக் கொழுப்புகளில் சிறிதளவு உள்ளது. இது வளர்ச்சியை உண்டு பண்ணும் காரணி.

arachis oil : கடலை எண்ணெய் : நிலக்கடலையிலிருந்து எடுக்கப்படும் ஆலிவ் எண்ணெய் போன்றது.

arachnide : அராக்கினைட்.

arachnodactyly : சிலந்தி விரல் நோய் : சிலந்தி போன்ற விரல்களில் உண்டாகும் ஒரு பிறவி நோய்.

arachnoid : சிலந்தி சவ்வு; சிலந்தி வலையுரு : (நூலாம் படை) போன்ற நீர் மயிர் சவ்வு.