பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

artane

143

arteriorrhaphy


artane : ஆர்ட்டான் : 'பென்செக்சால்' என்ற மருந்தின் வணிகப்பெயர்.

artefact : செயற்கைத் திசு மாற்றம் : திசுவின் கட்டமைப்பில் செயற்கையான மாற்றத்தை உண்டாக்குதல்.

arteralgia : தமனி நோவு; தமனி வலி : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் வலி.

arteria : தமனி; தமனி நாளம் : இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடல் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்த நாளம். (விதி விலக்கு) நுரையீரல் தமனி (இது அசுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும்).

arterial : தமனி நாளம் சார்ந்த; தமனி சார்.

arteriectasis : தமனி நாளத் தளர்வு.

arter(o) : தமனி : 'தமனி' எனும் பொருள்படும் இணைப்புச் சொல்.

arteriogram : தமனி வரைவு; தமனி வரைபடம்; தமனி நாள வரைவு.

arteriography : தமனி இயக்க முறை; தமனி வரைவியல்; தமனி படவியல் : ஊடுருவக்கூடிய ஒரு திரவத்தை ஊசி மூலம் செலுத்தி தமனி மண்டலம் இயங்குவதைக் காட்டுதல்.

arteriolor : குறுந்தமனிய.

arteriole : நுண்தமனி; நுண்நாடி; குறுநாடி; குருதிநாடி; குறுந்தமனி : ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி, தமனிகளிலிருந்து குருதி நாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும்.

arteriolonecrosis : நுண் தமனி மரித்தல்; நுண்தமனித் திசு இறப்பு : நுண் தமனி நாளம் இறந்து விடுதல்.

arteriolopathy : நுண்தமனிநாள நோய் : நுண்தமனி நாளத்தில் ஏற்படும் நோய் வகை.

arteriopathy : தமனி நோய்; தமனி நலிவு : ஏதேனுமொரு தமனியில் உண்டாகும் நோய்.

arterioplasty : தமனி அறுவை மருத்துவம்; தமனிச் சீரமைப்பு; தமனி அமைப்பு : ஒரு தமனியில் ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

arteriorrhaphy : தமனி இணைப்பு : தமனி நாளத்தைத் தையல் மூலம் இணைத்தல்.