பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arteriorrhexis

144

arthritis


arteriorrhexis : தமனி வெடிப்பு : தமனிநாளம் வெடித்து விடுதல்; தமனி நாளம் சிதைவடைதல்.

arteriosclerosis : தமனி இறுக்கம்; நாடி இறுக்கம்; தமனித் தடிப்பு : முதுமை காரணமாக தமனி நலிவடைந்து மாற்றமடைதல். குருதிக் குழாயின் இடை மென் தோல் தடிப்பதால், இது உண்டாகிறது.

arterioscloratic : தமனியிறுக்க.

arteriostenosis : தமனிக் குறுக்கம்; தமனிநாளக் குறுக்கம் : தமனி நாளம் உள்விட்டத்தில் கருங்குதல்.

arteriotony : குருதி வடிப்பு; தமனித் திறப்பு : தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல்.

arteriovenous : தமனி நரம்பு; தமனிச் சிரைக்குரிய; தமனிச் சிரை சார் : ஒரு தமனியும், ஒரு நரம்பும் தொடர்புடைய எதுவும்.

arteritis : நாடி அழற்சி; தமனி அழற்சி; தமனியழல் : இதயத்தி லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய். இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிருதுவாகி அதில் இரத்தம் கட்டிக் கொள்ளக்கூடும்.

artery : தமனி நாடி; குருதிக் குழாய்; பாய் குழல் : இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் பகுதியும், நெகிழ்வுடைய இழைமங்களும், இதயத்திலிருந்து இரத்தம் அழுத்தப்பட்டு வெளியேற்றப்படும்போது விரிவடைவதற்கு அனுமதிக்கிறது. புறத்தேயுள்ள திகப்படலம், தமனி அளவுக்கு மீறி விரிவடைந்து விடாமல் தடுக்கிறது. இதயத்தின் அருகில் இதன் குழாய் பெரிதாக இருக்கும்; பின்னர் படிப்படியாகச் சிறுத்துச் செல்லும்

artery coronary : இதய தமனி :

arthralgia : மூட்டுவலி : ஒரு முட்டில் வீக்கமில்லாமல், ஏற்படும் வலி.

arthritic : கீல்வாத நோயாளி.

arthri tide : மூட்டு வீக்கக் கொப்புளம் : சிறுமூட்டுகளில் ஏற்படும் வாதநோய் விளைவால் கட்டுள்ள தோலில் கொப்புளம் தோன்றாது.

arthritis : மூட்டு வீக்கம்; மூட்டு அழற்சி; மூட்டழல் : ஒன்று