பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arthropoda

146

artificial


மூட்டு அமைப்பு : ஒரு முட்டினை அறுவை மருத்துவம் மூலம் சீர்படுத்துதல்.

arthropoda : கணுக்காலிகள்.

arthropyosis :சீழ் முட்டுக்குழி; மூட்டுக் குழிச்சீழ் : எலும்பு முட்டுக் குழியில் சீழ் சேருதல்.

arthroscope : மூட்டுக் குழிப்படக் கருவி; மூட்டு அகநோக்கி; மூட்டு உள்காட்டி : ஒரு முட்டின் குழியின் உட்பகுதியைப் படம் எடுப்பதற்கான ஒரு கருவி.

arthroscopy : மூட்டுக் குழிப்பட மெடுத்தல்; மூட்டு உள் காண்டல் : ஒரு முட்டின் குழியின் உட் பகுதியைப் படமாக எடுத்தல்.

arthrosis : மூட்டிணைப்பு; நலிவு; எலும்பு இணைப்பு; மூட்டு நோய் : ஒரு மூட்டிணைப்பு படிப் படியாக நலிதல்.

arthrostomy : மூட்டுத் துளை; மூட்டு வெட்டு; மூட்டுத் திறப்பு : ஒரு முட்டினுள் துளையிடுதல்.

arthrosynovitis : எலும்பு மூட்டுறை அழற்சி : எலும்பு முட்டை முடியுள்ள மேலுறையில் அழற்சி உண்டாவது.

articular : மூட்டுக்குரிய; மூட்டுச் சார்ந்த; மூட்டு முனை : ஒரு முட்டு அல்லது முட்டிணைப்பு தொடர்பான முக்கியமாகக் குருத்தெலும்பு தொடர்பான.

articulate : மூட்டுதல், மூட்டல் : 1. இரு எலும்புகள், அசைவுக்கு வழிவிட்டு இணைதல், 2. தெளிவாகப் பேசக்கூடிய, 3. (செயற்கைப் பல் இணைப்பைத் தயாரிக்கும் போதும்) பற்களைச் சரியாகப் பொருத்துதல்.

articulation : மூட்டிணைப்பு; மூட்டு அமைப்பு; மூட்டுப் பொருத்தம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எலும்புகளின் மூட்டு இணைப்பு. -

articulator : மூட்டிணைப்பி : 1. பல் மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி. செயற்கைப் பற்களைத் தயாரிக்கப் பயன்படும் கருவி. 2.எலும்புகளைக் கோத்து எலும்புக் கூடுகளை உருவாக்குபவர்.

artifact : செயற்கைப் பொருள்; செயற்கைத் துகள்; பொய்ப் பொருள் : 1. ஒரு ஆய்வின்போது ஏற்படும் தடைப்பொருள். உண்மையான பொருள் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொய்ப்பொருள். ஆய்வின் முடிவைக் குழப்பும் பொருள். 2. ஊடு கதிர்ப்படம் எடுக்கும் போது அல்லது துண்திசுக்கூறு இயல் ஆய்வின் போது தொழில் நுட்பக் குறைபாடு காரணமாக உண்டாகின்ற ஒரு பொய்யான பொருள். 3. செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற ஒரு பொருள்.

artificial : செயற்கையான.