பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aryenoid

148

aschoff's nodules


படுகிறது. இதிலுள்ள மிக நுண்ணிய கம்பி (வயர்) இதயத் தசைப் பகுதியுடன் இணைக்கப்படுகிறது. இதிலுள்ள மின்கலம் மூலம், கம்பி துண்டுதல் பெற்று இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இக்கருவி பொருத்தப்பட்ட சில நாட்களில் நோயாளியின் இதயம் மீண்டும் சீராக இயங்கத் தொடங்கும். அவ்வாறு சீராக இயங்கத் தொடங்கியதும் இக்கருவி தன் பணியை நிறுத்திக் கொள்ளும். மீண்டும் கோளாறு ஏற்பட்டால், இக்கருவி மீண்டும் தானாகவே பணியைத் தொடங்கி விடும். இக்கருவி 10 ஆண்டுகள் வரை செயற்படும்.

aryenoid : அரிநாய்டு : குரல் வளையில் காணப்படும் மிகச் சிறிய குருத்தெலும்பு இணைகளில் ஒன்று.

arytaenoid; arytenoid : குரல்வளைக் குருத்தெலும்பு; குரல் வளைத் தசை.

arytenoidopexy : குரல்வளைக் குருத்தெலும்பு இணைப்பு : குரல் வளைக் குருத்தெலும்பை அறுவைச் சிகிச்சை மூலம் இணைப்பது.

asbestos : கல்நார்: தீக்கிரையாகாது. ஆடையாக நெய்வதற்குப் பயன்படுகிற நார் அமைவுடைய கணிப்பொருள் வகை.

asbestosis : கல்நார் நோய்; கல் நார் படிவ நோய் : கல்நார் தூசி யையும் இழைமத்தையும் சுவாசிப்பதால் ஏற்படும் ஒரு வகைச் சுவாசக் கோளாறு.

ascariasis : குடற்புழு நோய்; உருளைப்புழு நோய் : சிறு குடலில் குடற்புழுக்கள் பெருகுவதால் உண்டாகும் நோய். உருண்டைப் புழுக்கள் பெருகினால், இந்நோய் இரைப்பை, ஈரல்குலை துரையீரல் ஆகிய வற்றுக்கும் பரவுகிறது.

ascaricide : குடற்புழு ஒழிப்பான் : சிறுகுடற்புழுக்களை ஒழிக்கும் ஒருவகை மருந்து.

ascarid : சிறு குடற்புழு.

ascarides : நீளுருள் புழு : சிறு குடற்புழு வகையைச் சேர்ந்த நீண்டு உருண்ட புழுக்கள், உருண்டைப் புழுக்கள், நாடாப் புழுக்கள் ஆகியனவும் இவ்வகையைச் சேர்ந்தவை.

ascaris : சிறுகுடற்புழு குடலிலுள்ள வளையப் புழுக்கள் போன்ற புழுக்கள்.

ascending : ஏறுமுக.

aschoff's nodules : அஷாஃப் கரணை; அஷாஃப் நுண்கணு : கீல்வாத நோயின்போது நெஞ்சுப் பையின் தசைப்பகுதியில் ஏற்படும் கரணைகள்.