பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ascites

149

asian paralysis syndrome


ascites : மகோதரம் : அகட்டு நீர்க்கோவை.

ascorbic acid : ஆஸ்கார்பிக் அமிலம் : இது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்போது இது அழிந்து விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் இது அழிந்துபடுகிறது. இந்த ஊட்டச் சத்துக் குறை வினால் எதிர்வீச்சு நோய் (ஸ்கர்வி) உண்டாகிறது. இரத்த சோகையை நீக்குவதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் இந்த ஊட்டச்சத்து கொடுக்கப் படுகிறது.

ascomycetes : அஸ்கோமை சீட்ஸ் : காளான் குடும்பத்தைச் சேர்ந்தது.

ascorbic : அஸ்கார்பிக் அமிலம் : (வைட்டமின் சி) (ஸ்கர்வி நோயை) மூக்கு இரத்தக் கசிவு நோயைத் தடுக்கும் உயிர்ச்சத்து.

asomia : பேச இயலாமை; பேச்சுணர்வின்மை : பேச இயலாததோடு பேசுவதைப் புரிந்து கொள்ளவும் இயலாத நிலை.

asepsis : நச்சு நுண்மமின்மை; சீழ் தவிர்ப்பு; சீழின்மை : கெடுபுண் உண்டாக்குகிற அல்லது தசையழுகலை உண்டாக்குகிற நோய்க்கிருமி இல்லாதிருத்தல்.

aseptic : சீழற்ற : தசையழுகல் தடைப்பொருள்.

aseptic technique : தசையழுகல் தடைப் பொருள்; சீழற்ற : தசை யழுகல் நோயைத் தடுப்பதற்காக உடலுக்குள் செலுத்தப்படும் தசையழுகல் தடைப் பொருள். செலுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

asepticism : தசையழுகல் தடை முறை : தசையழுகல் நோயைத் தடுப்பதற்கான சிகிச்சை முறை.

asepticiza : தசையழுகலை தடை செய்.

aserbine : அசர்பைன்; தீப்புண் : நாள அழற்சி, நோவுதராத சீழ்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான களிம்பு மருந்து. கட்டிகளை இளக்கும் தன்மையுடைய இந்த மருந்தில், சாலிசிலிக் அமிலம், பென்சாயிக் அமிலம் அடங்கியுள்ளன.

asexual : அல்புணர்.

ash : நீறு; சாம்பல்; பால் வேறுபாடற்ற.

asian paralysis syndrome : ஆசியப் பக்கவாத நோயியம் : குழந்தைகளுக்குத் திடீரென ஏற்படும் பக்கவாத நோய் இரண்டு பக்கக்கால்களும் அல்லது