பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

astroblastoma

153

asynclitism


கரு அணு; நரம்பு நார்த்திசு அணுவை உருவாக்குகிறது.

'astroblastoma : நரம்பு நார்த்திசு அணுக்கோள் கட்டி : நரம்பு நார்த்திசு அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் புற்று அணுக்களாக மாறி விடுவதால் உண்டாகின்ற புற்றுநோய்க்கிடட்டி.

astrocyte : நரம்பு நார்த்திசு அணு : நரம்பணுவில் ஒரு வகை நரம்பணு உருவாவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் அணு வகை.

astrocytoma : மூளைக் கழலை : மூளையின் மற்றும் முதுகுத் தண்டின் கீழ்த்தசையில் மெதுவாக வளர்ந்து வரும் ஒரு கழலை.

astroglia : நரம்பு நார்த்திசுக் கட்டி : நரம்பு நகர்த்திசுக்களில் உருவாகும் கட்டி.

astrovirus : அஸ்ட்ரோ வைரஸ் : இது RNA வைரஸ் வகையைச் சார்ந்தது. குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நோயை ஏற்படுத்தக்கூடியது.

AST test : ஏ.எஸ்.ட்டி, சோதனை : ஆஸ்பார்ட்டேட் டிரான்ஸ் ஃபெராஸ் (AST) என்பது பொதுவாக ஈரல் குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகுகளுக்கு மேல் இது இருந்தால் அது இயல்புக்கு மீறிய அளவாகும். இது ஈரல் குலை நோய் இருப்பதைக் குறிக்கிறது.

astrup test : ஆஸ்டிரப் சோதனை : இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்டை-ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அழுத்த அளவுகளை அளவீடு செய்து, இரத்தத்தில் அளவுக்கு மீறியுள்ள அமிலப் பொருளை (காடிப் பொருள்) மதிப்பிடுவதற்கான சோதனை.

asymmetrical : ஒத்திசைவற்ற; ஒத்திசைவில்லா.

asymmetry : சமச்சீரின்மை; சீர்மையின்மை; ஒத்திசைவற்ற : உடலின் இருபுறமும் உள்ள உறுப்புகள் சமச்சீர் இல்லாமல் இருத்தல்.

asymptomatic : நோய்க் குறியின்மை; நோய்க் குறியிலா; குறியிலா : நோய்க் குறிகள் புலனாகாமல் இருத்தல்.

asynchronism : ஒத்தியங்காமை : ஒத்திசைவு இல்லாமை.

asynclitism : தலைக் குறுக்குத் தோற்றப் பிறப்பு : குழந்தை பிரசவ மாகும்போது ஆண் தலைக் குறுக்காக அமைந்து விடுதல்.