பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

asynechia

154

atheroembołus


இரத்த அணுக்களில் உட்கருவும் திசு உட்பாய்மமும் வேறுபட்ட காலங்களில் முதிர்ச்சியடைதல்.

asynechia : உடலியல் தொடர்பின்மை; அமைப்புத் தொடர்பு இல்லாமை.

asynergy : உடலின் வேறுபட்ட பகுதிகளுக்குள் அல்லது உடல் உறுப்புகளுக்குள் ஒத்திசையாமை.

asystole : இதயத்துடிப்பின்மை atheroembołus: இதய நிறுத்தம். இதயத்துடிப்பு. இல்லாமை.

ataratic : மனநோய் தீர்க்கும் மருந்து; உள அமைதியூக்கி; சாந்த மூட்டி : உணர்வை மழுங்கச் செய்யாமல் மனச்சீர்குலைவைத் தணிக்கும் மருந்துகள்.

atarax : அட்டாரக்ஸ் : ஹைட்ராக்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

atavism : முன்மரபு மீட்சி; மூதாதையம்; முதுமரபு மீட்சி : மூதாதையரின் நோய் சில தலை முறைகளுக்குப் பின்னர் மீண்டும் வருதல்.

atavistic : முது மரபு மீள்வுடைய.

ataxia : நிலைசாய்வு.

ataxia. ataxy : உறுப்பு ஒத்தியங்காமை; தள்ளாட்டம்; தள்ளாடல்; நிலை சாய்வு : தசைக் கட்டுப்பாடு குறைபாடு காரணமாக உடலுறுப்புகள் ஒத்தியங்கராமை; இயலாதிருத்தல். உறுப்புகள் வெட்டியிழுப்பதும், தள்ளாடு வதும் இதனால் உண்டாகின்றன.

atebrin : ஆட்டேப்ரின் : 'மெப்பாக்ரின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ateloctasis : நுரையீரல் விரியாமை ஈரல் சுருக்கம் நுரையீரல் சுருங்கி விடுதல். குழந்தைகளுக்கு நுரையீரல் விரிவதில் சிரமம் ஏற்படும் நிலை.

atelia : குறைவளர்ச்சி : முழுமையற்ற வளர்ச்சி, சீரற்ற வளர்ச்சி.

atelocardia : இதயக்குறை வளர்ச்சி : இதயம் முழுமையாக வளராத நிலை. இதயம் சில குறைபாடுகளுடன் வளர்ச்சி பெற்றிருத்தல்.

athelia : பிறவி முலைக் காம்பின்மை : பிறவியிலேயே முலைக் காம்பு இல்லாமல் பிறப்பது.

atherectomy : இரத்த உறைக் கட்டி அகற்றல் : இரத்தத் தமனி நாளத்திலிருந்து இரத்த உறைக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்.

athermic : வெப்பமற்ற; காய்ச்சலற்ற : உடலின் வெப்பம் இயல்பாக இருத்தல். வெப்பம் உயராமை; வெப்பம் இல்லாதிருத்தல்.

atheroembolus : நகரும் இரத்த உறைக் கட்டி : இரத்தத் தமனி