பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

attrition

159

audiometry


ஒவ்வொன்றையும் ஈர்த்துக் கொள்ளுதல்.

attrition : பல்தேய்வு : பற்களைப் பயன்படுத்துவதால் பல்லின் உள்துளைப் பரப்புகள் தேய்ந்திறுகுதல்.

audiogram : கேட்புத்திறன் பதிவுக்கருவி; கேளலை வரைவி; கேட்டல் வரைபடம்; கேள்விப் பதிவு : கேள்விமானியால் பரிசோதனை செய்து கேட்புத்திறனை அளவிட்டுப் பதிவுசெய்யும் கருவி.

audiology : கேட்பியல்; கேட்டலியல் : கேட்புத்திறனை அறிவியல் முறையில் ஆராய்ந் தறிதல்.

audiometer : கேள்விமானி; கேட்புக்கருவி; கேட்பு:அளவி; கேட்டல் மானி : கேட்புத்திறனை மருத்துவ முறையில் அளவிடுவதற்கான ஒரு கருவி.

audition : கேட்டல் : செவிப் புலன்.

auditory : கேட்கும் பகுதி; கேட்டல்; கேட்பியல்சார் : செவிப்புலன் தொடர்புடைய பகுதி. கேட்புத்திறன் தொடர்பான இடம்.

atypia : இயல்பற்ற; இயல்புமீறிய; இயல்பின்றி.

atypical : இயல்பற்ற; இயல்பிலாத பொதுமாதிரியற்ற; இயல்பிலா மைக்கோபேக்டீரியம் : காசநோயை உருவாக்குகின்ற மைக்கோ பேக்டீரியம் டியூலர் குளோசிஸ் பாக்டீரியாவைப் போலன்றி வீரியம் குறைந்த பாக்டீரியா சுற்றுச்சூழல் நிரம்பியுள்ளது. நுரையீரலைத் தாக்கக் கூடியது. காசநோயைப் போல நோயைத் தரவல்லது.

Au : பொன்(தங்கம்)னைக் குறிக்கும் வேதிப்பெயர்.

audio) : ஆடியோ : 'கேளுணர்வை'ச் சார்ந்த இணைப்புச் சொல்.

audiogenic : ஒலி உண்டாக்கி : ஒலியால் உண்டாகின்ற.

audiologist : கேள் உணர்வியல் வல்லுநர்; கேள்திறன் மருத்துவர்; கேள் உணர்வியலாளர் : கேள்திறனில் பயிற்சிபெற்ற மருத்துவர் அல்லது மருத்துவ பணியாளர். .

audiometry : கேள்திறனளவி : ஒரு நபருடைய கேள்திறன் அளவை அளந்து காண்பிக்கும் கருவி. இதன் அளவு டெசிபல் அலகுகளில் இருக்கும். ஒலி அலை நீளத்திற்கும் அதைக் கேட்கும் நபரின் ஒலி கேள் உணர்வுத் திறனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை இக்கருவி அளந்து காண்பிக்கும்.