பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aut(o)

162

autoclave


நோயாளிகளைத் துக்குவதற்கான ஆஸ்திரேலிய முறை, இதனை 'தோள் துக்கும் முறை' என்றும் கூறுவர். நோயாளிகளின் எடை முழுவதையும் தூக்குபவர்கள் தங்கள் தோளில் தாங்கிக் கொள்ளும் வகையில் துக்குதல்.

autt(o) : 'தன்' இணைப்புச்சொல்.

autism : தற்சிந்தனை நோய்; தன்மயம்; தான்தோன்றி; தற்போக்கு : தன் மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கி தற்புனைவு உலகில் ஆழ்ந்திருக்கும் ஒரு நோய் நிலை. இது ஒரு தீவிரமான மதிமயக்கநிலை.

autistic person : தன்நினைவு நோயாளி; தன்மைய; தற்போக்கான : மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் முழுவதுமாகத் தனிமையில் ஒதுங்கித் தற்புனைவுக் கற்பனைகளில் மூழ்கியிருக்கும் நோயாளி.

autistic thinking : தற்புகழ்ச்சி எண்ணம்; தற்சிந்தனை; தன் நினைவு.

autoagglutination : குருதியணு தன்னொட்டுத்திரள்; தன் திரட்சி : தன்னியக்க நோய் எதிர்ப்பு பொருள்களினால் உண்டாகும் இரத்தச் சிவப்பணுக்கள் தானாக ஒன்றுசேர்ந்து கொள்ளுதல். குருதிச்சோகை நோயின்போது இவ்வாறு நேரிடுகிறது.

autoagglutinin : தன் திரட்சிக் கூறு : உடலிலுள்ள தன்னொட்டுப் பொருளுடன் ஒன்று சேரும் அணுக்கூறு.

autoamputation : தன்னுறுப்பு நீக்கம் : உடலில் உள்ள உறுப்பு அல்லது உறுப்பின் ஒரு பகுதி தானாகவே நீங்கிக் கொள்ளுதல்.

autoantibody : தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்; தன் எதிர்ப்பொருள் : உடலிலுள்ள டி.என்.ஏ, மிருதுவான தசை, மண்டையோட்டு உயிரணுக்கள் போன்ற இயல்பான அமைப்பான்களுடன் இணைந்து கொள்ளும் ஒரு நோய் எதிர்ப்புப் பொருள்.

autoantigen : தன்னொட்டு காப்பு மூலம் : தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்களுடன் இணைந்து கொள்ளும் காப்பு மூலம்.

autociasis : தன்னழிவு : தடுப்பாற்றல் வினையினால் உடலின் உள்ளுறுப்பு அழிதல். உடல் தானாகவே நடுப்பகுதியை கழித்துக் கொள்ளும் தன்மை.

autoclave : தானியங்கிக் கொப்பரை; அதியழுத்தக் கொதிகலன்; அழுத்தக் கொப்பரை; வெப்பழுத்தக்கலன் : கடும் வெப்பமும், உயர்