பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antodigestion

163

autointoxication


அழுத்த நிலையும் ஏற்கும் வலிமையும் வாய்ந்த பெருங்கொப்பரை. இது நுண்மம் அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

antodigestion : தற்செரிமானம்; தன் சீரணம் : உயிருள்ள உடலில் புறப்பொருள் உதவியின்றி அகப்பொருளுதவி கொண்டே நிறைவு தரும் செரிமானம்.

autoeczematization : சுய தோலழற்சிப் பரவல் : தோலழற்சி நோயின் துவக்கநிலைச் சிதைவுகள் உடல் முழுமையும் பரவுதல்.

autoeroticism : செயற்ககை தற்புணர்ச்சி : செயற்கைத் தற்புணர்ச்சிக் கையாடல் பழக்கம் தன்விழைச்சுத் திணவு.

autograft : தற்திசு மாற்றம்; தன் ஒட்டு : உடலில் ஒரு பகுதியி லிருந்து இன்னொரு பகுதிக்குத் திசுக்களை மாற்றிப் பொருத்துதல்.

autohaemolysin : சுய இரத்தச் சிதைவுப் புரதம் : இரத்தச் சிவப் பணுக்களைச் சிதைக்கின்ற எதிர் ஆக்கல் புரதம்.

autohaemolysis : தன் குருதி அழிவு; சுய ரத்தமழிவு : நோயாளியின் இரத்தத்தில் உள்ள ஊநீர் காரணமாக இரத்த அணுக்கள் அழியும் நிலை.

autohaemotherapy : சுய ரத்தமேற்றல் : நோயாளியின் சொந்த இரத்தத்தையே சுத்திகரித்து மீண்டும் செலுத்துவது.

autoimmune diseas : நோய்த் தடைக்காப்பு குறி நோய்; தன் தடுப்பாற்று நோய் : தன்னில் உருவாகித் தன் திசுவையே தாக்கும் ஊக்கிகளால் வரும் நோய்.

autoimmunity : தன் தடுப்பாற்றல்.

autoinoculation : தன்னுடல் ஏற்றம்; தன்திசு; ஏற்றம் : தன்னுடைய உடலில் உள்ள நோய்க் கிருமிகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது செலுத்திக் கொள்ளுதல்.

autointoxication : தன்னஞ்சூட்டல் : உடலில் உற்பத்தியாகும் பொருள்களினாலேயே உடலில் ஏற்படும் நச்சுத் தன்மை.

autoimmunization : நோய்த் தடைக் காப்பு ஊக்குமுறை; தன் தடுப்பாற்றுவித்தல் : நோய்த் தடைக்காப்பு நோய் உண்டாக வழிவகுக்கும் ஒரு செயல் முறை.

autoinfection : தன் நோய் தொற்று; தன் தொற்று : தன் செய்கை மூலமாக நோய் தொற்றுதல்.

autointoxication : திசு நச்சூட்டம்; தன்போதை; தன்னஞ்சூட்டல் : உடலில் உண்டாகும் வளர்சிதை மாற்றப் பொருள்கள் அளவுக்கு மிகுதியாக அல்லது குறைபாடுகளுடன் உண்டாவதால் ஏற்படும்