பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

autosome

166

Avellis


autosome : தன் இனக்கீற்று; தன் மெய்யம் : பாலினக்கீற்று அல்லாத வேறொரு இனக் கீற்று.

autosplenectomy : மண்ணீரல் தன்னிழப்பு : கடுமையான நார்ப் பெருக்கத்தாலும் திசுச் சுருக்கத்தாலும் மண்ணிரல் தானாகவே அழியும் நிலை.

'auto suggestion : உள்தூண்டுதல்; தற்றூண்டுகை : ஒருவருடைய மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தற்றுண்டுதல். இசிப்பு நோய்க் கோளாறின்போது இந்நிலை உண்டாகக் கூடும்.

autotoxin : தன்நச்சு : உயிரியினுள் விளையும் மாறுதலால் ஏற்படும் நச்சுச் சத்து.

autotransfusion : இரத்த இழப்பீடு : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதால் உள்ளபடிக்கு ஏற்பட்ட இரத்த இழப்பீட்டை, அதே அளவு இரத்தத்தை உட்செலுத்தி ஈடு செய்தல்.

autotroph : தன்னுணவாக்குயிர் : நேரே இயற்பொருளிலிருந்து உணவு ஆக்கவல்ல உயிர்.

autotrophic : தன்னுணவாக்குகிற; தன்வளர்வு : இயற் பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல.

autovaccine : தந்தடுப்பூசி : நோயாளியின் திசுக்களிலிருந்து அல்லது சுரப்பு நீர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நுண்ணுயிரிகளைக் கிருமி வளர்ப்பு முறையில் வளர்த்துத் தடுப்பூசி தயாரித்தல், நோயாளியிடமிருந்தே தயாரிக்கப்படும் தடுப்பூசி.

avirulent : வீரியமற்ற.

auxocyte : வளர்சினை : முதிராச்சினை, ஒரு விந்தணு ஆரம்ப கால வளர்ச்சியில் இருத்தல், விந்தணு துவக்கநிலை.

avascular : குருதிநாளமின்மை; குருதிக்குழலற்ற; குழலின்மை : குருதி கொண்டு செல்வதற்கான குருதி நாளங்கள் இல்லாமையால் குருதி வழங்கீடு இல்லாதிருத்தல். குருதி வழங்குதல் இல்லாமையால், உறுப்பு நசித்துப் போதல்.

Avelis : அவெல்லிஸ்நோயியம் : மனித மூளையில் 'நியூக்ளியஸ் அம்பிகஸ்' மற்றும் மூளைத் தண்டுவட நரம்புப் பாதையில் சிதைவு ஏற்படும்பொழுது உண்டாகின்ற ஒரு நோய்த் தொகுப்பு இது. ஜெர்மன் குரல் வளை நோய் வல்லுநர் அவெல்ஸ் என்பவர் கண்டுபிடித்த நோயியம். இந்த நோயாளிக்கு குரல்வளை, மெல்லண்ணம் ஆகியவற்றில் வாதம்